உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவு இதுதான்! உயிரையும் பறிக்கும்.. எச்சரிக்கை
நாம் உண்ணும் சில உணவுகள், நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டும். ஆனால் அப்படி உணவுகளை அதிகமாக உண்ணும் போது, அதனால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
நாம் சாப்பிடும் முந்திரி, வேர்க்கடலை, பால் போன்றவை கூட நமக்கு ஆபத்தை விளைவிக்கும். அப்படி ஆபத்தை ஏற்படுத்தும் சில உணவுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
ஆபத்தான உணவுகள்
பச்சை முந்திரி
உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்களில் பச்சை முந்திரியும் ஒன்று. ஆய்வுகளின் படி, பச்சை முந்திரியை வேக வைத்து உடைத்து சாப்பிடாமல், உலர வைத்து உடைத்து உட்கொண்டால், அதனால் சருமத்தில் அலர்ஜி ஏற்படுவதோடு, அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், சில நேரங்களில் அது உயிருக்கு ஆபத்தை கூட விளைவிக்கும்.
ஏனெனில் பச்சை முந்திரியின் மேல் பகுதியில் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த உருஷியோல் என்னும் மோசமான கெமிக்கல் உள்ளது. இதனால் அது சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
காட்டு காளான்
காட்டு காளான்களும் மிகவும் ஆபத்தான உணவுப் பொருளாகும். காட்டுக் காளானை சிறிது கடித்தாலும், அது வாந்தியை ஏற்படுத்தும். அதையே அதிகமாக உண்டால், அது மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.
கூவை கிழங்கு (Cassava)
கிழங்குகளில் ஒன்றான கூவைக் கிழங்கும் மிகவும் ஆபத்தான ஒன்று. இந்த கிழங்கை பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள நொதியானது சையனைடாக மாறி, உயிருக்கே உலை வைத்துவிடும்.
வேர்க்கடலை
சிலருக்கு வேர்க்கடலை அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே அலர்ஜி உள்ளவர்கள் வேர்க்கடலையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
கடல் சிப்பி
கடல் சிப்பியும் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஆபத்தானது. அதிலும் உங்களுக்கு கடல் சிப்பியால் அலர்ஜி என்றால், அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால், அது கடுமையான அரிப்பு, அடிவயிற்று வலி மற்றும் சில நேரங்களில் வாழ்க்கையே உலை வைத்துவிடும்.
உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவு இதுதான்! உயிரையும் பறிக்கும்.. எச்சரிக்கை
Reviewed by Author
on
October 12, 2018
Rating:

No comments:
Post a Comment