மன்னார் மூர்வீதி கிராமத்திற்கான பொது மண்டதிற்கான அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மூர்வீதி கிராமத்திற்கான பொது மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை 15-10-2018 காலை இடம் பெற்றது.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள குறித்த பொது மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் உவைசூல் கர்னி தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் பிரத்தியோக செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இதன் போது குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாஹிர் , தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளர் என்.எம். முனவ்பர், அமைச்சரின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் எம்.முஜிபுர் ரகுமான் மற்றும் பள்ளி நிருவாகிகள், உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மூர்வீதி கிராமத்திற்கான பொது மண்டதிற்கான அடிக்கல் நாட்டி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
October 16, 2018
Rating:

No comments:
Post a Comment