அண்மைய செய்திகள்

recent
-

முள்ளங்கி ஜூஸ் குடிச்சா உடல் எடை குறையும்....


இதுவரை எத்தனையோ எடை குறைப்பு மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டும் உடல் பருமன் குறையாமல், நீங்கள் வெறும் ஏமாற்றத்தையே சந்தித்து வருகிறீர்களா? அப்படியானால் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். அதில் ஒன்று தான் முள்ளங்கி ஜூஸை அன்றாட டயட்டில் சேர்த்து வருவது. உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு வழிகள் மற்றும் உண்பதற்கு பல உணவுப் பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் எவ்வித பக்க விளைவுகளையும் உண்டாக்காத மற்றும் நீண்ட நாட்கள் பலனை அனுபவிக்க வைக்கும் மிகச்சிறந்த வழி என்றால் அது சில ஜூஸ் டயட்டை மேற்கொள்வது தான். நீங்கள் குறைந்த காலத்திலேயே உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்டுகள் குறித்து விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்.

 ஆனால் இப்படி குறுகிய காலத்தில் உடல் எடையைக் குறைக்கும் வழிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவற்றால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் விலை அதிகமானதாகவும் இருக்கும். காய்கறிகளுள் ஒன்றான முள்ளங்கியை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவும். மேலும் முள்ளங்கி விலை குறைவானது மற்றும் எவ்வித பக்கவிளைவுகளையும் உண்டாக்காமல், ஒருவரது உடல் எடையைக் குறைக்கும் என்பதால், உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கு, இந்த காய்கறி மிகச்சிறப்பான காய்கறி என்றே கூறலாம்.



ஏன் முள்ளங்கி ஜூஸ் குடிக்க வேண்டும்? சமைக்காத மற்றும் சமைத்த முள்ளங்கியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். ஆனால் முள்ளங்கியை பச்சையாக அப்படியே சாப்பிடுவதை விட, ஜூஸ் வடிவில் உட்கொள்வது மிகவும் சிறந்த வழி. இதற்கு காரணம், முள்ளங்கியை ஜூஸ் வடிவில் எடுப்பதன் மூலம், உடலால் அதில் உள்ள சத்துக்களை வேகமாகவும் எளிதாகவும் உறிஞ்ச முடியும். முள்ளங்கியை அரைத்து ஜூஸ் தயாரிக்கும் போது, அந்த காய்கறியில் உள்ள முழு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஐசோதியோசையனேட் போன்றவைகள் கிடைக்கும். ஐசோதியோசையனேட்டுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய பண்புகளாகும். எனவே முள்ளங்கி ஜூஸ் ஒருவரது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று கூறலாம். எப்படி ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகிறது? உண்ணும் உணவுகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் நடைபெறும் ஆக்ஸிஜனேற்ற செயல்முறையால் ஏற்படும் திசு பாதிப்பை தடுக்கும். திசுக்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரிக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் தேக்கமும் குறைவாக இருக்கும். இதன் மூலம் உடல் எடை குறைய முள்ளங்கி ஜூஸ் உதவியாக இருக்கும்.


முள்ளங்கி ஜூஸின் இதர நன்மைகள் முள்ளங்கி ஜூஸ் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதில் சிறந்தது. மேலும் இது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களையும் நீக்கும். இந்த பானம் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உவுவதோடு, பித்தநீரை சீரான அளவில் உற்பத்தி செய்யும். ஒருவரது உடலில் செரிமானம் சிறப்பாக நடைபெற்றால், எவ்வித வாய்வு உருவாக்கமும் இல்லாமல், உடல் லேசாக இருப்பதோடு, வயிற்று பிரச்சனைகளும் தடுக்கப்படும்.

முள்ளங்கி ஜூஸ் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
* அன்னாசி துண்டுகள் - 1 கப்
* முள்ளங்கி - 1 துண்டு

 செய்முறை: *
அன்னாசியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். * பின் முள்ளங்கியை நீரில் கழுவி, தோலை நீக்கிக் கொள்ள வேண்டும். * பிறகு அதை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். * பின்பு மிக்ஸியில் அன்னாசித் துண்டுகள் மற்றும் முள்ளங்கித் துண்டுகளைப் போட்டு நன்கு அரைத்து வடிகட்டினால், எடையைக் குறைக்க உதவும் முள்ளங்கி ஜூஸ் தயார். இப்போது முள்ளங்கி ஜூஸின் இதர ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம். நார்ச்சத்து 1/2 கப் முள்ளங்கியில் 1 கிராம் நார்ச்சத்து உள்ளது.

இது உடல் எடை குறைப்பிற்கு சிறந்தது. ஒருவர் நார்ச்சத்து எடுக்கும் அளவை அதிகரித்தால், அது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். நார்ச்சத்து அவ்வளவு எளிதில் செரிமானமாகாது. எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வுடன் இருக்கும். எனவே அன்றாட டயட்டில் முள்ளங்கியை சேர்த்து வாருங்கள். இதனால் நீங்கள் உண்ணும் உணவின் அளவு குறையும். இதன் மூலம் உடல் எடை குறையும். க்ளைசீமிக் இன்டெக்ஸ் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான அளவில் இருக்கும் உணவுகளை உட்கொண்டு வந்தால், உடல் எடை குறையும்.

அப்படி க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள ஓர் உணவுப் பொருள் தான் முள்ளங்கி. க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுகளை உண்பதன் மூலம், அது உடலினுள் செரிமானமாவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அதுவே க்ளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ள உணவுகள் விரைவில் உடைத்தெறியப்பட்டு, இரத்த சர்க்கரையின் அளவை உணவு உட்கொண்ட உடனேயே சட்டென்ஸ் அதிகரிக்கும். இதனால் உடலானது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு அதிகமான அளவு இன்சுலினை சுரக்க வேண்டியிருக்கும். ஒருவரது உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருந்தால், அது கொழுப்பைக் கரைக்கும் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகரிக்கும்.

எனவே க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு, இரத்த சர்க்கரை அளவை சீரான அளவில் பராமரியுங்கள். இந்த வழியின் மூலம், கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுக்கலாம். கலோரி குறைவு முள்ளங்கியில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே இது எடையைக் குறைக்க உதவும் சிறப்பான காய்கறியாக கருதப்படுகிறது. வேண்டுமானால் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்போர், ஸ்நாக்ஸ் வேளையில் முள்ளங்கி ஜூஸைக் குடித்து வாருங்கள். பின் உங்கள் உடல் எடையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.


முள்ளங்கி ஜூஸ் குடிச்சா உடல் எடை குறையும்.... Reviewed by Author on October 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.