அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மழை பெய்கின்றபோதும் புதைகுழி அகழ்வுப் பணி 82வது நாளாகவும்...படங்கள்


மன்னாரில் மழை பெய்கின்றபோதும் திட்டமிட்டவாறு மன்னார் நகரில் சதொசவிற்பனை நிலைய வளாகத்தில் நடைபெற்றுவரும் மனித புதைகுழி அகழ்வு பணிதிட்டமிட்வாறு இடம்பெற்று வருகின்றது.

கடந்த வார இறுதியில் 154 எலும்புக்கூடுகள் கண்டுப்பிடிக்கப்ட்டு இதில்
151 வெளியேற்றப்பட்ட நிலையில் இவ் பணி நேற்று திங்கள் கிழமை (08.10.2018)
82 வது தினங்களாக முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் மன்னார் நகர் நுழைவாயில் பகுதியில் சதொச விற்பனை
நிலையத்துக்கான கட்டுமான பணி இடம்பெற்றபோது இப்பகுதியில் அகழ்வு
செய்யப்பட்ட மணலில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது மன்னார் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற
நீதிபதி த.சரவணராஜாமுன்னிலையில் விசேட சட்ட வைத்திய நிபுணர்
டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ச தலைமையில் கொண்ட குழுவினர் இவ் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓரிரு தினங்களாக மன்னாரில் மழை பெய்து வருகின்றநிலையில் அகழ்வு
செய்யப்படும் புதைகுழியில் மழை நீர் நிரம்புகின்றபோதும் இவைகள்
இயந்திரத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில் இவ் பணி
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.









மன்னாரில் மழை பெய்கின்றபோதும் புதைகுழி அகழ்வுப் பணி 82வது நாளாகவும்...படங்கள் Reviewed by Author on October 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.