மன்னாரில் ஆ.அன்ரன் தங்கேஸ்வரன் வெற்றிக் கிண்ணம் உதைபந்தாட்டப் போட்டி
மன்னார் சொக்கோ மாஸ்ரர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உதைபந்தாட்ட கழகத்தின் முக்கியஸ்தராக இருந்த மறைந்த ஆல்வார்பிள்ளை அன்ரன் தங்கேஸ்வரனின் மறைவின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்டப் போட்டிக்கள் இன்று (சனிக்கிழமை 20.10.2018) ஆரம்பிக்கின்றன.
இவ் போட்டிகளில் வடக்கு மற்றும் கிழக்கைச் சார்ந்த 12 கழகங்கள்
பங்குபற்றுவதுடன் நாற்பது வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கான சுற்றுப்
போட்டிகளாக இது அமைகின்றது.
இவ் போட்டியில் பங்குபற்றும் அணிகள் 50 வயதுக்கு மேற்பட்ட ஒருவரும், 45
வயதுக்கு மேற்பட்ட மூவரும், 40 வயதுக்கு மேற்பட்ட ஐவரும் கட்டாயம்
பங்குபற்றுபவர்களாக இருக்கின்றனர்.
ஓவ்வொரு அணியிலும் ஒன்பது பேர் கொண்ட குழுவாகவே இவ் போட்டி நடைபெறுகின்றது.
இவ் போட்டியில் வெற்றியீட்டும் முதலாம் இடத்தை பிடிக்கும் குழுவுக்கு
பரிசாக 50 ஆயிரமும் வெற்றிக் கிண்ணமும்.
இரண்டாம் பரிசாக 30 ஆயிரமும் வெற்றிக் கிண்ணமும். ஆத்துடன் சிறந்த
வீரருக்கு 5 ஆயிரமும் சிறிய வெற்றிக் கிண்ணமும், சிறந்த காப்பாளருக்கு
பரிசு பொருளாக 5 அயிரமும் சிறிய வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட
இருக்கின்றன.
இவ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் கழகங்களான சிரே~;ட
விளையாட்டு வீரர்களான (சொக்கோ மாஸ்ரர்) மன்னார் சொக்கோ மாஸ்ரர், வவுனியா சொக்கோ மாஸ்ரர், சீனியர் ஸ்ரார், கிளிநொச்சி சொக்கோ மாஸ்ரர், திருமலை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம், அம்பாரை சொக்கோ மாஸ்ரர், அட்டாளைச்சேனை கழகம், மருதமுனை கழகம், மட்டக்களப்பு கழகம், காத்தான்குடி மற்றும் முல்லைத்தீவு கழகங்கள் இவ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக இதன் பொறுப்பாளர் கே.ஸ்ரீகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்..
சனி, ஞாயிறு (20,21.10.2018) ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இவ் போடடியின்முதல் நாள் காலை 8.30 மணிக்கு இவ் போட்டிகள் மன்னார் நகர சபை மைதானத்தில் ஆரம்பிக்கின்றன.
இறுதி நாள் இறுதி போட்டியின்போது
பிரதம அதிதியாக
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமூதாய அபிவிருத்தி அமைச்சின் மேலதிக
செயலாளர் திருமதி.A.ஸ்ரான்லி டீ மெல் மற்றும்
கௌரவ விருந்தினர்களாக
சட்டத்தரனியும் வட மாகாண சபை உறுப்பினருமான டெனிஸ்வரன், கைத்தொழில் அமைச்சரின் இணைப்பு செயலாளர் ரிவ்கான் பதியுதீன்,
வர்த்தக உரிமையாளர் பி.எம்.எம்.இர்ஷட் ஆகியொருடன்
சிறப்பு அதிதிகளாக
புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்செல்வன் ரெஜினோல்ட், ஓய்வுநிலை அதிபர் அருட்செல்வன் ஸ்ரணிஸ்லாஸ், ஓய்வுநிலை பிரதேச செயலாளர் எம்.பரமதாசன்,
மன்னார் விளையாட்டு அதிகாரி பிறின்ஸ் லெம்பேட் ஆகியோர் கலந்து
கொள்ளுகின்றனர்.
அன்றையத் தினம் மன்னாரில் உதைபந்தாட்டத்துக்கு நீண்டகால சேவையாற்றி மறைந்த ஆல்வார்பிள்ளை அன்ரன் தங்கேஸ்வரனின் மறைவின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புத்தக வெளியீடும் இடம்பெறுகிறது.
மன்னாரில் ஆ.அன்ரன் தங்கேஸ்வரன் வெற்றிக் கிண்ணம் உதைபந்தாட்டப் போட்டி
Reviewed by Author
on
October 20, 2018
Rating:

No comments:
Post a Comment