புகலிடம் கோருவோர் சுவிட்சர்லாந்தை புறக்கணிக்கிறார்களா?
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5-வது முறையாக புகலிட கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு துவக்கம் முதம் யூன் வரையான காலகட்டத்தில் மொத்தமாக 11,484 பேர் மட்டுமே புகலிடம் கோரி சுவிட்சர்லாந்தில் மனு அளித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விடவும் 17.5 சதவிகிதம் குறைவு என அரசு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மட்டுமின்றி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையாக காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தை நாடுபவர்களின் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்துள்ளது இதுவே முதன் முறை எனவும் கூறப்படுகிறது.
உண்மையில் புகலிடம் கோருவோர்களின் முதன்மை இலக்கு சுவிஸ் அல்ல. மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவே பெரும்பாலான மக்கள் சுவிட்சர்லாந்தை பயன்படுத்துவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 1,749 புகலிட கோரிக்கை பெறப்பட்டதாகவும், அதில் 279 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும், 319 கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொண்டதாகவும், அதில் 643 கோரிக்கையாளர்களுக்கு தற்காலிகமாக தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.
புகலிட கோரிக்கையாளர்கள் பெரும்பாலும் எரித்திரியா (155 பேர், 54 பேர் குறைவு), துருக்கி (113), ஆப்கான் (111) மற்றும் சிரியா (107) ஆகிய நாடுகளில் இருந்தே சுவிட்சர்லாந்தை நாடுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் புகலிட கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 19,000 என அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இது லிபியாவில் ஏற்படும் சூழலை பொறுத்தே இந்த எண்ணிகையில் மாற்றம் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புகலிடம் கோருவோர் சுவிட்சர்லாந்தை புறக்கணிக்கிறார்களா?
Reviewed by Author
on
October 25, 2018
Rating:
Reviewed by Author
on
October 25, 2018
Rating:


No comments:
Post a Comment