திருகோணமலை நகரின் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் வெளியேற்றும் திட்டம் -
தனி நாடு (ஈழம்) கேட்டுப் போராடிய புலிகளை அழித்து விட்டோம். இப்போது இருப்பது தமிழர் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலை நகர் பகுதி. இந்த நகர் பகுதி எப்போதும் சிங்களத்திற்கு ஒரு உறுத்தலாகவே உள்ளது. அதை தவிடு பொடியாக்க வேண்டும் என்று சிங்களம் நீண்ட காலமாக முயன்று வருகின்றது .
அதற்கு ஒரே வழி திருகோணமலை நகரை புனித பூமியாக்குவது. அதன் மூலமாக திருமலை தி
ருக்கோணேஸ்வரம் ஆலயம் புனித பூமி என்று தமிழ் மக்களை திசை திருப்புவது.
ஆனால் இதன் பாதிப்புகள் மக்களுக்கு புரியாமல் “ஆலயம் புனித பூமி” எனதிருப்தி அடைவார்கள். இங்குதான் தமிழ் மக்களை முட்டாளாக்கும் திட்டம் அமுலுக்கு வருகின்றது .
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் அரச நிதி மூலமாக திருகோணமலையை சிங்கப்பூர் திட்டம் என்ற போர்வையில் நவீன மயமாக்கல் என்று ஒரு திட்டத்தை திருகோணமலையில் திணித்துள்ளார்.
இந்த திட்டம் வடகிழக்கு மாகாண முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் செல்வின் என்பவரால் முன்மொழியப்பட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் முன்னோடி பிதா என்றுதான் அவரை சொல்ல வேண்டும். வடக்கை சேர்ந்த இவர் நீண்ட காலமாக வெளிநாட்டில் வாழ்ந்து வந்தார்.
இதற்குள் எப்படி அவர் மூக்கை நுழைத்தார்? எப்படிப் புகுந்தார் என்பது வேறு கதையுள்ளது.
இந்த திட்டத்திக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் ஒன்று கடந்த மார்ச் மாதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைருமான சம்பந்தர் அவர்களின் இல்லத்தில் ரகசியமாக நடந்துள்ளது.
கூட்டத்திற்கு திருமலை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சில புத்திஜீவிகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்த திட்டம் குறித்து ஆராயப்பட்ட போது கிழக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் திருமலை ஜே. ஜனார்த்தனன் மற்றும் திருமலை நகர பிரதி தவிசாளர் நிஷாந்தன் ஆகியோர் மட்டுமே எதிர்த்துள்ளார்கள்.
மற்ற எல்லோரும் ஆமாம் சாமி போட்டுள்ளார்கள். ஆனாலும் கூட்டம் என்பது சிங்கப்பூர் திட்டம் என்று இல்லாமல் திருமலை நகர மற்றும் பிரதேச தலைவர்கள் நியமனம் பற்றிய கூட்டம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சிங்கப்பூர் திட்டம் குறித்து முன்னாள் கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் தண்டாயுதபாணியிடம் தலைவர் சம்பந்தர் தனியாகப் பேசிய போது தண்டாயுதபாணி உறுதியாக எதிர்த்துள்ளார் .
இந்த விடயம் மற்றுமல்லாது தண்டாயுதபாணி மற்றும் பலர் சம்பந்தர் மீது அதிருப்தி கொண்டுள்ளனர்.
இப்போது தண்டாயுதபாணியை எந்தவொரு கூட்டத்திற்கும் அழைப்பதில்லை. அவரும் கலந்து கொள்வதில்லை இப்படியாக திருமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீது பாரிய அதிருப்தி நிலை உருவாகியுள்ளது.
இந்த சிங்கப்பூர் திட்டத்திற்கு திருமலை நகர பிதா ஞானகுணாளன் பிரதேச தவிசாளர் ராசநாயகம் ஆகியோர் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்த இரண்டு தவிசாளர்களும் போனஸ் ஆசனம் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்கள்.
அதாவது மக்கள் ஆணை மூலமாக வெற்றி பெற்றுள்ளவர்கள் இருக்க போனஸ் ஆசனம் மூலமாக தெரிவு செய்யப்பட்ட இந்த இருவர்களையும் தவிசாளர்களாக கொண்டு வந்து அவர்கள் மூலமாக ரணிலின் சிங்கப்பூர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நகர்வாக காய் நகர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக திருகோணமலையின் இனப்பரம்பலை மாற்றுவதற்கு ஆமாஞ்சாமி போட்டிருக்கும் தமிழ் தலைவர்கள் 130, 000 சிங்கள குடும்பங்கள் வெளியிலிருந்து குடியேற்றப்படு இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு ஏன் மறைத்து வருகின்றார்கள்.
பெரியதிட்டமிடல் புலி, படித்த மேதைகள் என்று கொண்டு வரப்பட்ட குகதாசன் ராசநாயகம், ஞானகுணாளன் ஆகியோருக்கு இதொன்றும் தெரியாதா?
தெரியா விட்டால் தெரிந்து கொண்டும் ஏன் மக்களுக்கு இதைப் பற்றி தெளிவுபடுத்தவில்லை.
ஒட்டுமொத்த தமிழ் பிரதேசங்களும் பறிபோகும் திட்டத்திற்கு தமிழ் தலைவர்கள் எவ்வாறுஉடன்பட முடியும். அதன் பின்னணி என்ன ?
திருகோணமலை மாவட்டத்திற்கு தேவையான ஒட்டுமொத்த வேலை வாய்ப்பை போல பத்து மடங்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
மீதி ஒன்பது மடங்கும் வெளியில் இருந்துதானே கொண்டு வரப்போகின்றார்கள். அப்படியானால் வெளி மாவட்ட சிங்கள வாலிபர்கள் யுவதிகள் திருமலைக்கு இறக்குமதி செய்யவா?
சீனக்குடாவில்இருந்து சல்லி வரையான கரையோர பகுதி வரை உள்ள மக்கள் எழுப்பப் படப்போகிறார்கள். இது இவர்களுக்கு தெரிந்தும் ஏன் இத்திட்டத்திற்கு ஒத்துழைத்தார்கள்? இந்த மக்களை எங்கு குடியேற்றுவது?
ஏற்கனவே காணிகள் இன்றி இருக்கும் காணிகளுக்கு பெர்மிட் இன்றி தவிக்கும் தமிழ் மக்களை எழுப்பிக் கொண்டேசொந்த ஊரிலேயே அகதிகள் ஆக்கப்போகிறதா இந்த திட்டம்.
காணி உரிமையாளர்களுக்கு உரிய விலையை விட அதிகமாக பணம் தருகிற இத்திட்டத்தில் காணி இல்லாதவர்களுக்கு எப்படி காணி வழங்க போகிறார்கள்.
நகரத்திலே குடியிருப்பு காணிகள் இருக்கக்கூடாது வியாபார காணிகள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றால் நகரத்தில் வீடு வைத்திருப்பவர்களின் நிலை என்ன?
தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகமும் வெருகல் பிரதேசசெயலகமும் இல்லாமல் போகப்போகிறது.
சிங்கப்பூர் திட்டம் திருகோணமலைக்கு வேண்டாம். என்ற குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். எஞ்சியுள்ள தமிழர் தாயகம் காக்கப்பட வேண்டும். தலைவர் சம்பந்தர் இந்த விடயத்தில் மக்கள் கருத்தை மதிக்க வேண்டும்.
இந்த விடயத்தில் மக்கள் கருத்து மதிக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் தண்டாயுதபாணி மற்றும் ஜனார்த்தனன் தலைமையில் மக்கள் வீதிக்கு இறங்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை எனலாம்
இந்த கட்டுரை எழுத்தாளர் M.M.Nilamdeen அவர்களால் வழங்கப்பட்டு 06 Oct 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது.
திருகோணமலை நகரின் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் வெளியேற்றும் திட்டம் -
Reviewed by Author
on
October 06, 2018
Rating:

No comments:
Post a Comment