அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய பெண்ணுக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை: உறுதி செய்த நீதிமன்றம் -


மலேசியாவில் கணவனை குத்தி கொலை செய்த பிரித்தானிய பெண்ணுக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த ஜான் வில்லியம் (62) - சமந்தா (51) தம்பதியினர் தங்களுடைய விடுமுறையை கழிப்பதற்காக மலேசியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார்.

அங்கு வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த தம்பதியினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சமந்தா சமையலறைக்கு சென்று நீளமான கத்தியால் கணவருடைய நெஞ்சு பகுதியில் குத்தி கொலை செய்துள்ளார்.

பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்தத்துடன் 12 அங்குல கத்தி அவர்களுடைய படுக்க அறையில் இருந்ததை கண்டறிந்தனர்.
இதனையடுத்து சமந்தாவை கைது செய்த பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கு விசாரணையை கேட்ட நீதிபதி, சமந்தாவிற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து சமந்தாவின் வழக்கறிஞர் கூறுகையில், கணவரால் சமந்தா நீண்ட நாட்களாகவே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலினாலே கணவரை குத்தி கொலை செய்துள்ளார்.
இதுபற்றி பேசுவதற்கு நீதிபதி எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதனால் தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும் கணவரை கொலை செய்த சமந்தா தற்போது பெரிதும் வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக மலேசியாவில் தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள் விரைவில் மரணதண்டனையை ஒழிப்போம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பெண்ணுக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை: உறுதி செய்த நீதிமன்றம் - Reviewed by Author on October 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.