தமிழ் பாடசாலைகளில் மாணவர் தொகை வீழ்ச்சியில் பிரதான காரணம் யுத்தமே! தவிசாளர் கலையரசன் -
இந்த நிகழ்வானது இன்று மாலை பின்தங்கிய பிரதேங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு கனடா நாட்டின் மொன்றியல் புளூஸ் விளையாட்டு கழகத்தின் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிராந்திய இணைப்பாளர் ஜீ.லவன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பின்தங்கிய கிராம வறிய பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கல்வியினை ஊக்குவிக்கும் முகமாக கல்வி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தவிசாளர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
1990ஆம் காலகட்டங்களில் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர் தொகையை பார்க்கும் போது ஐந்நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர் ஆனால் இப்பொழுது அந்த தொகை குறைவடைந்திருக்கின்றது என்ற விடயத்தை ஆழமாக சிந்திக்க வேண்டும்.
ஏன் எனில் நாட்டில் தமிழர்களுக்கெதிரான யுத்தமே காரணம். யுத்தத்தால் தந்தையை இழந்துள்ளனர் சகோதரர்களை இழந்துள்ளனர், இதன் காரணமாகவே பாடசாலைகளில் தமிழ் மாணவர்களினது அதாகையும் குறைந்து கொண்டு சென்றிருக்கின்றது.
அத்தோடு ஒவ்வொரு குடும்பத்தையும் எடுத்துப்பார்த்தால் எங்களுடைய மாணவர் தொகை குறைக்கப்பட்டதோடு இனத்தின் விகிதாசாரம் குறைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு இனம், மொழி, கலாசாரம் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய கடப்பாடுள்ளது.
எதுவானாலும் நடக்கட்டும் என்ற சிந்தனையுடன் இருக்கக்கூடாது. எம் இனம், மொழி கலாசாரம், பாரம்பரியம் போன்ற விடயத்தை நாம் மனதில் வைத்து செயற்படவேண்டும்.
மாணவர்களது கல்வியில் ஆசிரியர்களை விட பெற்றோர்களது பங்கும் இன்றியமையாததொன்று இதன் மூலமே ஒழுக்கத்துடன் குடிய மதுபழக்மற்ற இளைஞர்களை உருவாக்கமுடியும் என தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் கழகத்தின் பிராந்திய உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ் பாடசாலைகளில் மாணவர் தொகை வீழ்ச்சியில் பிரதான காரணம் யுத்தமே! தவிசாளர் கலையரசன் -
 
        Reviewed by Author
        on 
        
October 17, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 17, 2018
 
        Rating: 


No comments:
Post a Comment