எந்த ஏழு பேர்? பேரறிவாளன் உள்ளிட்டவர்களை தெரியாது என கூறிய ரஜினிகாந்த் -
இது குறித்த காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சென்னையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசு அனுப்பி வைத்த கடிதத்தை குடியரசு தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லாது மத்திய உள்துறை அமைச்சு திருப்பியனுப்பியுள்ளது”
இந்த விடயம் தொடர்பில் ரஜினிகாந்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், எந்த ஏழு பேர் என மீண்டும் ஊடகவியலாளர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், அது குறித்து தனக்கு தெரியாது எனவும் அவர் பதிலளித்துள்ளார். இது குறித்த காணொளி ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
எந்த ஏழு பேர்? பேரறிவாளன் உள்ளிட்டவர்களை தெரியாது என கூறிய ரஜினிகாந்த் -
Reviewed by Author
on
November 13, 2018
Rating:

No comments:
Post a Comment