பெண்களை தாக்கும் ரெட் சின்ட்ரோம் நோயின் 10 முக்கிய அறிகுறிகள் -
மெதுவான வளர்ச்சி
ரெட் சின்ட்ரோமின் முதல் அறிகுறி பிறந்த குழந்தையின் மூளை செல்களின் வளர்ச்சி குறைவாக இருக்கும். மேலும் குழந்தைகள் வளர வளர மற்ற பாகங்களின் வளர்ச்சியும் குறைவாக இருக்கும்.
அசைவுகளில் மாற்றம்
அடிக்கடி கைகளின் இயக்கங்கள் குறைதல் மற்றும் நடக்கும் பொழுது சரியாக நடக்க முடியாமல் போகுதல் போன்றவை ஆகும்.
பேசுவதில் சிரமாம்
ரெட் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆர்மபத்திலிருந்தே பேச சிரமப்படுவார்கள் அதுமட்டுமின்றி அவர்களின் கை, கண் வழி தொடர்புகள் கூட சீராக இருக்காது. சில குழந்தைகள் திடீரென பேசும் தன்மையை இழப்பார்கள்.திடீரென கை தட்டுதல்
ரெட் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் திடீரென கை தட்டுதல், கைகளை தேய்த்தல், அருகிலிருப்பவர்களை அடித்தல் போன்றவை அதன் அறிகுறிகளாகும்.
கண் இயக்கங்களில் மாற்றம்
ரெட் சின்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி கண் சிமிட்டுதல், கண் அடித்தல், மாறு கண், ஒரு கண்ணை மட்டும் அடிக்கடி மூடுதல் போன்ற செயல்பாடுகள் இருக்கும்.சுவாச பிரச்சினை
மூச்சை அடக்குதல், வேகமாக மொச்சு விடுதல், அழுத்தத்துடன் காற்றை வெளியேற்றுதல் இது போன்ற அறிகுறிகள் பெரும்பாலும் குழந்தைகள் எழுந்திருக்கும் நேரத்தில் தோன்றும்.
அழுகை
ரெட் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எரிச்சல் உணர்வு அதிகம் இருக்கும் இது அவர்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க அதிகமாகும். காரணமே இன்றி திடீரென அழவும், கத்தவும் தொடங்குவார்கள்.இதய துடிப்பு
ரெட் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திடீரென இதய துடிப்பு நின்றுவிட கூடிய அபாயம் உள்ளது. இதனால் மரணம் கூட ஏற்படலாம்.
முதுகெலும்பு வளைவு
இது 8 முதல் 11 வயது வரை பெண் குழந்தைளை தாக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க இதன் பாதிப்பும் அதிகரிக்கும். இதற்கு ஆரம்ப நிலையிலேயே அறுவை சிகிச்சை செய்வது நல்லது.தூக்க கோளாறுகள்
திடீரென தூக்கத்தில் விழுதல், இரவு நேரம் விழித்திருத்தல், பகல் நேரம் முழுவதும் தூங்குதல் போன்றவை குழந்தைக்கு ரெட் சின்ட்ரோம் இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
பெண்களை தாக்கும் ரெட் சின்ட்ரோம் நோயின் 10 முக்கிய அறிகுறிகள் -
Reviewed by Author
on
November 12, 2018
Rating:

No comments:
Post a Comment