இரண்டு கைகள் மற்றும் கால்களில் கியூபை சுழற்றி கின்னஸ் சாதனை படைத்த 13 வயது சிறுவன்!
சீனாவின் ஜியாமென் மாகாணத்தைச் சேர்ந்த கியூ ஜியான்யூ(13) என்ற சிறுவனுக்கு கியூப் வண்ணங்களைச் சேர்க்கும் போட்டியில் பங்கேற்பது மிகவும் பிடிக்கும்.
கலைந்திருக்கும் ரூபிக்ஸ் கியூப் வண்ணத்தைச் சேர்க்கும் விளையாட்டு கடினமானதாகும். இதற்கு காரணம் அதிக நேரத்தை இந்த விளையாட்டு எடுத்துக்கொள்ளும். எனினும், திறமைசாலிகள் சில நிமிடங்களிலேயே இதனை சேர்த்து விடுவார்கள்.
இந்நிலையில், கியூ ஜியான்யூ ரூபிக்ஸ் கியூப் வண்ணங்களைச் சேர்க்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் ஒரு நிமிடம் 36 விநாடிகளிலேயே கியூப் வண்ணங்களைச் சேர்த்து கியூ ஜியான்யூ சாதனை படைத்துள்ளார்.
அவர் ஒரே நேரத்தில் 2 கைகளில் ஒரு கியூப், கால்களில் ஒரு கியூப் என மூன்று கியூப்களில் வண்ணங்களை சேர்த்தார். ஏற்கனவே 2 உலக சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
அதாவது தலைகீழாக தொங்கியபடி கியூப் வண்ணங்களை 15.84 விநாடிகளில் சேர்த்து சாதனை படைத்துள்ளார். மற்றொரு சாதனை என்னவென்றால், தனது ஆசிரியர் யே ஜியாக்ஸியுடன் இணைந்து 25.63 விநாடிகளில் ரூபிக்ஸ் கியூப் வண்ணங்களைச் சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் உலக சாதனை தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, கியூ ஜியான்யூவிற்கு கின்னஸ் புத்தக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். அத்துடன் உலகெங்கிலும் இருந்து கியூவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
இரண்டு கைகள் மற்றும் கால்களில் கியூபை சுழற்றி கின்னஸ் சாதனை படைத்த 13 வயது சிறுவன்!
Reviewed by Author
on
November 16, 2018
Rating:

No comments:
Post a Comment