பெருங்குடல் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும்? வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறிகள் -
அனைத்து நோய்களையும் போலவே இந்த பெருங்குடல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டால் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.
பெருங்குடல் புற்றுநோய் முக்கிய அறிகுறிகள்
- திடீரென எதிர்ப்பாராத வகையில் உடல் எடை குறைந்தால், பெருங்குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என அறியலாம்.
- வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பிரச்சனைகள் தொடரந்து இருந்தால் இந்த அறிகுறிகள் இருந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
- சிறுநீர் கழித்தவுடன், வயிற்று பகுதியில் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபடியே இருந்தால் இந்த அறிகுறிகள் புற்று நோய்க்கான அறிகுறிகளாக அமையலாம்.
- சிறுநீரகம் இரத்த நிறத்தில் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.ஏனெனில் இதுவும் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
- தசை பிடித்தல், வயிற்று பகுதியில் வலி ஏற்படுதல், எந்நேரமும் சோர்வாகவும், பலவீனமாகவும் தோன்றினால் ஆகியவையும் பெருங்குடல் புற்றுநோய்கான அறிகுறிகள் ஆகும்.
- இது போன்ற பல அறிகுறிகள் இந்த பெருங்குடல் புற்றுநோய்க்கு ஏற்படும். எனவே கவனமாக இருப்பது நல்லது.
யாருக்கெல்லாம் பெருங்குடல் புற்றுநோய் வரும்?
- நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
- பெருங்குடல் புற்றுநோய்க்கு வயதும் மிக முக்கியக் காரணியாக செயல்படுகிறது. அதனால் 90% பேருக்கு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் பாதிப்பு ஏற்படும்.
- புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு 14 சதவிகிதம், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதமும் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து உள்ளது.
- மதுவை அதிகம் குடிப்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பவர்கள் ஆகியோருக்கு பெருங்குடல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எப்படி கண்டுபிடிப்பது?
- உடல் இயக்க மாற்றம், தொடர் வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் படிதல், மலச்சிக்கல், எடை குறைவது போன்ற பல அறிகுறிகள் இந்த நோய்க்கு உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
- கோலனோஸ்கோப்பி, சிக்மாய்டோஸ்கோப்பி, சி.டி கோலனோகிராஃபி போன்று பல்வேறு முறைகளில் இந்த நோய் தாக்கம் இருப்பதை உறுதி செய்யலாம்.
- சீரான இடைவெளிகளில் பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனைகள் செய்துகொள்வதன் மூலம், புற்றுநோய் செல்களை அவை கேன்சராக மாறும் முன்னரே கண்டுபிடித்து அகற்றி விடலாம்.
பெருங்குடல் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும்? வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறிகள் -
Reviewed by Author
on
November 16, 2018
Rating:

No comments:
Post a Comment