இருளில் மூழ்கிய 26 கிராமங்கள்.. கரையை கடந்த 'கஜா' புயல்: எச்சரிக்கும் வானிலை மையம் -
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு கடந்த 10ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
அது மேலும் வலுப்பெற்றதையடுத்து, அதற்கு "கஜா புயல்" என் பெயர் சூட்டப்பட்டது. காலை 7 மணிக்கு 138 கிமீ தொலைவில் ஆரம்பித்த புயல், தற்போது பலத்த காற்று மற்றும் கனமழையுடன் நாகை, வேதாரண்யம் அருகே கடந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், கஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கடந்துவிட்டது. இன்னும் 30 நிமிடங்களில் மீதி பாதியளவு கடக்கும்.
கண் பகுதி கடந்துவிட்டாலும் நாகையில் காற்றின் வேகம் குறையாது. அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்த்திசையில் பலத்தகாற்று வீசக்கூடும் என தெரிவித்திருந்தார்.
அதைப்போலவே தற்போது கஜா புயல் முழுவதுமாக கரையை கடந்து நிலப்பகுதியில் கரையை கடக்க ஆரம்பித்துள்ளது.
மேலும் 2 மணி நேரம் நீடித்த கஜா புயல் மணிக்கு 100கிமீ வேகத்தில் வீசியதாகவும், அதிராமபட்டினத்தில் அதிகபட்சமாக 111 கிமீ வேகத்தில் கரையை கடந்துள்ளது என தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் அடுத்த 6 மணிநேரத்தில் குறையும் எனவும் அதுவரை, புயல் காற்றிவேகம் குறைந்துவிட்டது என நினைத்து பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.
முன்னதாக புயலில் சிக்கி சேதமடைந்துள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருளில் மூழ்கிய 26 கிராமங்கள்.. கரையை கடந்த 'கஜா' புயல்: எச்சரிக்கும் வானிலை மையம் -
Reviewed by Author
on
November 16, 2018
Rating:

No comments:
Post a Comment