பா.ரஞ்சித்தின் பாலிவுட் படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு, கதை இதுதான்
தமிழில் கபாலி, காலா என தொடர்ந்து நல்ல படங்கள் கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்து பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
பழங்குடியினரை திரட்டி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற, பழங்குடியின மக்களின் சுதந்திரதத்திற்கு போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை இருக்குமாம். நமா பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.
பா.ரஞ்சித்தின் பாலிவுட் படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு, கதை இதுதான்
Reviewed by Author
on
November 16, 2018
Rating:

No comments:
Post a Comment