28 ரன்களுக்கு 9 விக்கெட்: மிக மோசமாக தோற்று போன தென் ஆப்பிரிக்க அணி!
மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ’ஏ’-வில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று பலப்பரீட்சை மேற்கொண்டன.
இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 48 ரன்கள் வரை ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது.

ஆனால், அடுத்தடுத்து மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுக்கத் தொடங்கியது.
முடிவில் அந்த அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெறும் 28 ரன்களுக்குள் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டம் ஸ்டெஃபினி டெய்லர் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


28 ரன்களுக்கு 9 விக்கெட்: மிக மோசமாக தோற்று போன தென் ஆப்பிரிக்க அணி!
Reviewed by Author
on
November 16, 2018
Rating:
No comments:
Post a Comment