பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய வருடாந்த பெருவிழா கொடியேற்றம்
மன்னார் மறைமாவட்டத்தின் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை புனித
வெற்றிநாயகி ஆலய வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு நேற்று வியாழக் கிழமை (29.11.2018) பங்குத் தந்தை அருட்பணி தேவராஜா கொடுத்தோர் அடிகளார் தலைமையில் பங்கு மக்களால் கொடியேற்றம் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் இவ் பெருவிழாவுக்கு மறையுரையாளராக தமிழ்நாடு கோவை
காங்காயம் குழந்தைமாதா திருத்தலத்திலுள்ள மரையுரையாளர் அருட்பணி சேவியர் கிளாடிஸ் அடிகளாரும், பேசாலை மைந்தனும் எழுத்தூர் பங்கு தந்தை அருட்பணி எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளாரும் கலந்து கொண்டார்கள்.
எதிர்வரும் 08.12.2018 நடைபெறும் பெருவிழாவை முன்னிட்டு ஒன்பது
நாட்களுக்கு இளையோர் தினம், குடும்ப தினம், தொழிலாளர், ஊழியர்கள் தினம், பணியாளர்கள் தினம், பக்தி சபைகள் தினம், முதியோர் தினம், ஆசிரியர்கள் தினம், நற்கருணை தினம் என அனுஷ்டிக்கப்பட இருக்கின்றன.
இறுதி நாள் 08ம் திகதி (08.12.2018) காலை 5.30 மணிக்கு பெருவிழா முதற்
திருப்பலியும், காலை 7.30 மணிக்கு சிறப்புப் பெருவிழா கூட்டுத்திருப்பலி
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் ஒப்புக்கொடுக்கப்படும்.

Reviewed by Author
on
November 30, 2018
Rating:
No comments:
Post a Comment