மாவீரர் தினத்துக்கு தயாராகும் துயிலும் இல்லங்கள்.....
2018 ஆண்டுக்கான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மும்முரமாக இடம் பெற்று வருகின்றது
அரசியல் மாற்றங்களாலும் அரசியல் குழப்ப நிலை மற்றும் சில அரசியல்வாதிகளின் விளம்பரம் தேடும் முயற்சியாலும் சில இடங்களில் மாவீரர் நிகழ்வு செயற்பாடுகள் மந்த கதியில் நகர்கின்றது
அந்த வகையில்
மன்னார் மாவட்டத்தில் உள்ள துயிலும் இல்லங்கள் ஆன ஆட்காட்டிவெளி பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்கள் தற்போது மாவீரர் குடும்பதினராலும் பொது அமைப்புக்களினாலும் பொது மக்களாலும் துப்பரவு செய்யப்பட்டு மாவீரர் நாளுக்காக ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றது குறிப்பாக ஆட்காட்டி வெளி துயிலும் இல்லமானது முழுவதுமாக கம்பி வேலி அமைக்கப்பட்டு உடைக்கப்பட்ட மாவீரர் நினைவு தூண்கள் சில அடுக்கப்பட்டு மாவீரர் நினைவேந்தல் நாளுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது.
1500 மேற்பட்ட மாவீரர்கள் துயில் கொண்ட மன்னார் ஆட்காட்டி வெளி துயிலும் இல்லம் தற்போது மீண்டும் புத்துயிர் பெருவது ஒட்டு மொத்த மன்னார் மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Reviewed by Author
on
November 22, 2018
Rating:

No comments:
Post a Comment