மூளையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் எவை தெரியுமா? -
அத்தகைய மூளை சிறப்பாக செயல்பட ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
ஆனால் தினமும் நாம் உட்கொள்ளும் சில உணவுகள் மூளையை பாதிக்கும். எனவே மூளைக்கு ஆபத்து விளைவிக்கும் உணவுகள் என்ன எனபதை தெரிந்துகொள்ளுங்கள்.
மூளையை பாதிக்கும் உணவுகள்
மக்காச்சோளம்
மக்காச்சோளம் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும், மைக்ரோவ்வேவ்வில் வைத்து தயாரிக்கப்படும் பாப்கார்ன்கள் சாப்பிடுவது மூளைக்கு ஆபத்தானது. ஏனெனில் இதில் அதிக கொழுப்புக்கள் உள்ளதால், இது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
சோடியம் நிறைந்த உணவு
சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது நம் உடலின் செயல்பாட்டைக் குறைத்து, மூளையையும் பாதிக்கச் செய்கிறது.ப்ரைட் ரைஸ்
ப்ரைட் ரைஸ் மற்றும் துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது மூளையை மட்டுமின்றி, உடலின் முழு ஆரோக்கியத்தையும் பாதித்துவிடும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள்
கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் காற்று நிரப்பிய பாக்கெட்களில் அடைக்கப்பட்ட திண்பண்டங்கள் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது நம் உடலில் கொழுப்புகளை அதிகமாக்கி, மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.சீஸ் மற்றும் வெண்ணெய்
தினமும் சீஸ் மற்றும் வெண்ணெய்யை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அந்த உணவில் உள்ள கொழுப்புகள், நம் மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும்.
குளிர் பானங்கள்
சர்க்கரை கலந்த பானங்களில் பிரக்டோஸ் அதிகமாக கலந்திருக்கும். அதன் தாக்கமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படக்கூடும். அதிகமாக சர்க்கரை பானங்களை அருந்துவது நீரிழிவையும் ஏற்படுத்தும்.மது அருந்துவது
மது அருந்துவது மூளையின் இயக்கத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். தொடர்ந்து மது அருந்துவது நரம்புக் கடத்திகளின் செயல்பாட்டை சீர்குலைக்கும்.
மூளையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் எவை தெரியுமா? -
Reviewed by Author
on
November 25, 2018
Rating:
Reviewed by Author
on
November 25, 2018
Rating:


No comments:
Post a Comment