அண்மைய செய்திகள்

recent
-

தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! -


நம்மில் பலரும் நோய் வந்தால் மட்டுமே வெந்நீர் பருகும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் தினமும் வெந்நீர் பருகி வந்தால் கிடைக்கும் பயன்களை பார்க்கலாம்.
வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது.
  • உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.
  • மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.
  • காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.
  • சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
  • தாகம் எடுத்தால் வெறும் தண்ணீரைக் குடிக்காமல் பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.
  • நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.
  • அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது. வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.
  • வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! - Reviewed by Author on November 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.