அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம்! விசாரணை அதிகாரியின் உயிருக்கு அச்சுறுத்தல் -


கொழும்பில் இடம்பெற்ற 11 பேர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் பிரதான சாட்சியாளர்களுக்கு மாத்திரமன்றி, விசாரணை அதிகாரியின் உயிருக்கும் அச்சுறுத்தல் எழுந்திருக்கின்றது.
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பில் ஐந்து மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிலையில் சந்தன பிரசாத் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மகிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக்காலமான 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளை பகுதிகளில் ஐந்து மாணவர்கள் உட்பட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவங்கள் தொடர்பான வழக்கில் பிரதான சந்தேக நபரான கடற்படையின் புலனாய்வு அதிகாரி லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி அண்மையில் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிலையில் சந்தன பிரசாத் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
விசாரணைகளின் போது மன்றில் முன்னிலையாகிய குற்றப்புலனாய்வு பிரிவின் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, இந்த வழக்கில் சந்தேகநபர்களாக அடையாங் காணப்பட்டிருக்கும் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸாநாயக்க மற்றும் கமாண்டர் சுமித் ரணசிங்க ஆகியோர் கடற்படைத் தளபதியினால் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

வழக்கில் சாட்சியாளர்களான லெப்டினன் கமாண்டர் சமிந்த வெலகெதர உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களுக்கு கீழ் சேவை செய்வதற்கான நிலை ஏற்பட்டிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதன் காரணமாக வழக்கின் பிரதான சாட்சியாளர்களுக்கு சந்தேக நபர்களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.பி.நிஷாந்த டி சில்வா நீதவானிடம் சுட்டிக்காட்டினார்.

அதனால் சாட்சியாளர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தை வெளிப்படுத்த முடியாத நிலை தொடர்ந்தும் ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினம் வழக்கு விசாரணை இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்திலும் கூட நீதிமன்ற வளாகத்தில் இரண்டு கடற்படை அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்ததாகவும் அவர் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அந்த அதிகாரிகள் எந்த காரணத்திற்காக மன்றின் வளாகத்தில் தரித்து நிற்கிறார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு அதிகரி நிஷாந்த டி சில்வா, இந்த நிலைமையில் தனது உயிருக்கும் ஆபத்து இருக்கலாம் என்றும் கூறினார்.
இதனிடையே குறுக்கீடு செய்த 5 மாணவர்களது பெற்றோர் தரப்பிலான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன,

இந்த வழக்கில் சந்தேக நபர்களிடம் இருந்து சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதன் காரணமாக காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான அலுவலகத்திலும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.
இந்த விடயங்களைக் கருத்திற்கொண்ட மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்க, சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் புறம்பான வழக்கொன்றை இதற்காக தாக்கல் செய்ய சந்தர்ப்பம் இருப்பதால் இதுகுறித்த விசாரணைகளை துரிதகதியில் ஆரம்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதேபோன்று இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணைகளை எதிர்வரும் 2ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் வரை சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை விளக்கமறியலில் வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.
கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம்! விசாரணை அதிகாரியின் உயிருக்கு அச்சுறுத்தல் - Reviewed by Author on December 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.