அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்க்கு பிரதேச பிரிவில் பல நாட்கள் நீடித்த மீனவர் பிரச்சினை தீர்வு -படங்கள்

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்க்கு பிரதேச செயலகர் பிரிவில் காயானகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள ஈச்சளவாக்கை கிராமத்தை சேர்ந்த நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்களுக்கு தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது

யுத்த காலப்பகுதியின் போது ஈச்சளவாக்கை கிராம பகுதியில் நண்னீர் மீன் பிடியில்   ஈடுபட்டு வந்த மீனவர்கள் யுத்த காலப்பகுதியின் போது இடம்பெயர்வுகளை சந்தித்து யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் குறித்த கிராமத்தில் குடியேரிய பின்னரும் அவர்களுக்கு மீண்டும் நன்னீர் மீன்பிடிக்கான அணுமதி மறுக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தமக்குரிய நீதியை பெற்றுதர கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிருவனத்தின் உதவியுடன் இலங்கை மனித உரிமை ஆணைகுழுவிடம் முறைபாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசரனை மேற்கொண்ட மனித உரிமை ஆணைகுழுவின் சிபரிசின் படி இன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீனவர்களுக்கான மீன்பிடி அனுமதியானது நீரியல் வள தினைகளத்தின் ஊடாக  வழங்கிவைக்கப்பட்டுள்ளது அத்துடன் குறித்த மீனவர்கள் மீன்பிடி உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது

குறித்த மீனவர்கள் 2019.01.01 இருந்து எந்தவித தடையும் இன்றி மீன் பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.
 







மாந்தை மேற்க்கு பிரதேச பிரிவில் பல நாட்கள் நீடித்த மீனவர் பிரச்சினை தீர்வு -படங்கள் Reviewed by Author on December 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.