சாள்ஸ் எம்.பியின் நிதியில் புதுக்குடியிருப்பு பகுதி 91குடும்பங்களுக்கு நிவாரணம்.
கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டடுள்ள உறவுகளுக்கு உதவும் முகமாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் நிதியிலும் மற்றும் சிபாரிசிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கடந்த இரு தினங்களாக வடக்கில் ஏற்பட்ட அசாதாராண கால நிலையினால் அதிகளவாக கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரணமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட வள்ளுவர்புரம்,பாரதிபுரம் பகுதிகளை சார்ந்த பாதிக்கப்பட்ட பாரதி வித்தியாலயம் பாடசாலையில் தங்கி இருந்த 91குடும்பங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் நிதியிலும் மற்றும் சிபாரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்தும் நிவாரண பணிகளுக்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் எம்.பியின் நிதியில் புதுக்குடியிருப்பு பகுதி 91குடும்பங்களுக்கு நிவாரணம்.
Reviewed by Author
on
December 24, 2018
Rating:

No comments:
Post a Comment