துரையம்மா அன்பகத்தின் 10ம்வருட பூர்த்தியும் மாணவமாணவிகளுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்…படங்கள்
மன்னார் மாவட்டத்தின் கல்விச்சேவையினை வழங்கி வரும் துரையம்மா அன்பகமானது 10ம் வருட ஆண்டுப்பூர்த்தியும் கல்விக்காக உள்வாங்கிய தெரிவு செய்யப்பட்ட 63(சாதாரண தரம் உயர்தரம் சித்தியடைந்தவர்கள் தவிர்ந்து) மாணவமாணவிகளுக்கு 2019ம் ஆண்டுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 23-12-2018 காலை 10 மணியளவில் மன்னார் மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வானது துரையம்மா அன்பக வளாகத்தில் பாப்பாமோட்டை திருக்கேதீஸ்வரம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளை மழைகாரணமாக இடமாற்றம் செய்யப்பட்டு மன்னார் மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதமவிருந்தினர்களாக
திருவாளர்.செ.கேதீஸ்வரன் செயலாளர் பிரதேச செயலகம் மாந்தை மேற்கு அவர்களும்.
திருமதி.கே.சிவசம்பு செயலாளர் பிரதேச செயலகம் மன்னார் அவர்களும்.
சிறப்புவிருந்தினர்களாக
திருவாளர் ப.ஞானராஜ் உதவிக்கல்விப்பணிப்பாளர் மன்னார் வலையம் அவர்களும்.
திருவாளர்.டானியல் அருந்தவராஜன் முகாமையாளர் மக்கள் வங்கி முருங்கன் அர்களும்
வைத்தியகலாநிதி.செ.லோகநாதன் போஷகர்- துரையம்மா அன்பகம் அவர்களும். அன்பகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாணவமாணவிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகளாக
தேசிய கீதம் அன்பககீதம் தமிழ்தாய் வாழ்த்து முழங்கவும் துரையம்மா அன்பக நிறுவியவரும் கல்வியால் மாணவச்செல்வங்கள் இவ்வுலகை வெல்ல வேண்டும் என்று ஒரே சிந்தனையுடன் முன்பள்ளி முதியோர் இல்லம் தொழி;ல்பேட்டை அமைத்து செயலாற்றவேண்டும் என்ற பெரும் எண்ணம் கொண்டிருந்த அமரர் திரு.வே.மனுவேல்பிள்ளை(உதயன்) அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
வரவேற்பு நடனம் சிறப்பு நடனம் பேச்சு பாடல் போன்ற மாணவிகளின் நிகழ்வுகளுடன்
பெறுமதியான பாடசாலைக்கற்றல் உபகரணங்கள் கலந்து கொண்ட தெரிவு செய்யப்பட்ட 63மாணவமாணவிகளுக்கு பிரதமவிருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்கள் அன்பகத்தின் நிர்வாகிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக
தற்போதைய சுழ்நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் இருக்கின்றபோது இவ்வாறான அமைப்புக்கள் மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்காக தமது பணத்தினையும் நேரத்தினையும் செலவு செய்து இவ்வாறான செயற்பாடுகளை முன்னின்று செய்வது பாராட்டுக்குரியதும் வாழ்த்துக்குரியதும்.
உறுப்பினர்களின் உழைப்பின் ஒருபகுதியை இவ்வாறான கல்விச்செயற்பாட்டுக்காக மனமுவந்து வழங்குவது அற்புதமான விடையம் அதுவும் 10ம் வருடத்தினை நிறைவு செய்து தொடர்ச்சியாக சேவையில் தலைவர் மறைந்த பின்னும் அவரின் பணிகளை தொடர்ச்சியாக செய்துவரும் பணியாளர்கள் உறுப்பினர்களையும் பாராட்டவேண்டும் தொடரட்டும் பணிகள் மாணவர்களின் கல்விச்சேவை மலரட்டும்.
நாங்களும் இணைந்து கொண்டு இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமான மாணவர்களை உள்வாங்கி சிறப்பாக சேவையாற்ற விருப்பமாகவுள்ளோம் என்றனர்….விருந்தினர்கள்....
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
துரையம்மா அன்பகத்தின் 10ம்வருட பூர்த்தியும் மாணவமாணவிகளுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்…படங்கள்
Reviewed by Author
on
December 24, 2018
Rating:

No comments:
Post a Comment