96 கிலோ உடல் எடையை குறைத்த உலகின் குண்டுச்சிறுவன்: அவரது ஆசை
உடல் எடையை குறைத்த பின்னர் குண்டாக இருந்தபோது பயன்படுத்திய உடையை அணிந்து தமது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்யா.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர்த் தொட்டியில் தனது குண்டான உடலை குளிரவைக்கும் குண்டுச்சிறுவனின் விசித்திர புகைப்படம் ஒன்று வெளியாகி சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு குட்டி கிராமத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சிறுவன் உடல் எடையை குறைக்க தீவிர சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக இந்தோனேசிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டது.

3 ஆண்டுகளுக்கு முன்னர் 197 கிலோ உடல் எடையுடன் இருந்த சிறுவன், தற்போது சுமார் 96 கிலோ வரை எடையை குறைத்துள்ளான்.
12 வயதேயான ஆர்யா தற்போது தமது நீண்ட நாள் கனவையும் தெரிவித்துள்ளான்.
தீவிர கால்பந்து ரசிகரான ஆர்யா, இனிமுதல் கால்பந்து பயிற்சியிலும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளான்.
தற்போது தினசரி 5 கிலோ மீற்றர் தொலைவு தமது நண்பர்களுடன் நடக்க முடிகிறது என கூறும் ஆர்யா, மாலை நேரங்களில் கால்பந்து விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளான்.

மாதம் 100 பவுண்டுகள் மட்டுமே வருமானமாக கொண்ட ஆர்யாவின் குடும்பம், சிறுவனின் அகோர பசிக்கு உணவளிக்கவே திண்டாடியுள்ளது.
ஒருகட்டத்தில் தினசரி 5 முறை உணவளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்யாவின் பெற்றோர் தள்ளப்பட்டிருந்தனர்.
வெறு 9 வயதாக இருக்கும்போதே நடந்து சென்று பாடசாலைக்கு செல்ல முடியாமல் முடங்கியுள்ளான்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தீவிர சிகிச்சையில் ஏற்பட்டிருந்த ஆர்யாவின் உடல் எடை வெறும் 3 வாரத்தில் 165 கிலோவாக குறைந்தது.
சர்க்கரை கலந்த உணவுகளை ஒட்டுமொத்தமாக தவிர்த்ததனாலையே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சாதாரண சிறார்கள் போன்றே ஆர்யாவும் பாடசாலைக்கு நடந்து செல்வதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.



96 கிலோ உடல் எடையை குறைத்த உலகின் குண்டுச்சிறுவன்: அவரது ஆசை
Reviewed by Author
on
December 20, 2018
Rating:
No comments:
Post a Comment