மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அனைவரையும் மயக்கிய அழகி!
கடந்த 2012-ம் ஆண்டு வரை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் திருநங்கைகள் கலந்துகொள்ளக் கூடாது என்று ஒரு தடை இருந்தது. ஜென்னா டாலக்கோவா என்ற திருநங்கை மாடலும், குளோரியா அல்ரெட்டின் என்ற வழக்கறிஞர் இருவரும் போராடி இந்தத் தடையை உடைத்தெறிந்து, போட்டியில் திருநங்கைகளும் கலந்துகொள்ள அனுமதி வாங்கினர்.
இதன் வெற்றியாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Ángela Ponce என்ற திருநங்கை மொடல் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

மிஸ் யுனிவர்ஸ் அலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட முதல் திருநங்கை என்ற சாதனையை Ángela Ponce, கடந்த ஜூன் மாதம் தான் ஸ்பெயின் நாட்டின் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதோடு நின்றுவிடாமல் ஒட்டுமொத்த திருநங்கைகளின் உரிமைகளை எடுத்துரைக்கும் விதமாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலக்கியுள்ளார். போட்டியில் வெற்றிபெறாவிட்டாலும் இவரின் இந்த முயற்சி பெரும் வெற்றியையும், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதைப் பற்றி Ángela Ponce கூறுகையில் "உலகின் மூலைமுடுக்கில் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒளிந்து வாழும் என்னைப் போன்ற ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களும், "இந்த ஒரு மிஸ் யுனிவர்ஸ் போட்டி எதனை வருடங்கள் ஓடினாலும் உலகவரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நாள்" என்று கூறியுள்ளனர்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அனைவரையும் மயக்கிய அழகி!
Reviewed by Author
on
December 20, 2018
Rating:
No comments:
Post a Comment