அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றும் கணவன்,மனைவியாகிய வைத்தியர்களும் நேரத்திற்கு சமூகமளிப்பதில்லை-மக்கள் விசனம்-படம்
கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வைத்தியர்களாக ஒன்றாக கடமையாற்றும் மன்னார் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில், உரிய நேரத்தில் குறித்த வைத்தியர்கள் கடமைக்கு சமூகமளிக்காமையினால் குறித்த பிரதேச மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் தனது மனைவியான வைத்தியருடன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் ஒன்றாக கடமையாற்றி வருகின்றனர்.
குறித்த வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கான விடுதியும் காணப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் ஏற்கனவே தென் பகுதியைச் சேர்ந்த சிங்கள வைத்தியர் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.
-குறித்த வைத்தியர் கடமையாற்றிய காலப் பகுதியில் மக்கள் எவ்வித சிரமங்களும் இன்றி வைத்திய தேவைகளை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் குறித்த வைத்தியர் திடீர் என இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில் அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு நிறந்தர வைத்தியர் தேவை என்ற காரணத்தினால் மன்னாரைச் சேர்ந்த குறித்த வைத்தியரும், வைத்தியராக உள்ள அவரது மனைவியும் அடம்பன் வைத்திய சாலைக்கு நியமிக்கப்பட்டனர்.
-எனினும் குறித்த இருவரும் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில் சமூகமளிப்பது இல்லை எனவும் வைத்தியசாலையின் வெளி நோயளர் பிரிவில் அதிகலவான நோயளர்கள் வந்த பின் கடமையாற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பின்பே குறித்த வைத்தியர் வருகை தந்து நோயளர்களை பார்வையிடுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் வைத்தியர் தொலைபேசியில் கூறுகின்ற போது அங்குள்ள வைத்தியசாலை ஊழியர்கள் நோயாளர்களுக்கு மருந்து வழங்கும் சம்பவமும் இடம் பெற்றுள்ளதாக பாதீக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வைத்தியரின் மனைவியான வைத்தியர் உரிய முறையில் வைத்தியசாலைக்கு கடமைக்கு வருவதில்லை எனவும், வந்தால் வைத்தியர் விடுதிக்கச் சென்று விடுவதாகவும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று 30-11-2018 வெள்ளிக்கிழமை இரவு அடம்பன் பிரதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரை இன்று சனிக்கிழமை 01-12-2018 காலை வரை குறித்த வைத்தியர்கள் வந்து பார்வையிடாத நிலையில், குறித்த நபரை உடனடியாக உறவினர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் உரிய நேரத்திற்கு கடமைக்கு வருவதில்லை எனவும் இதனால் அப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாக பாதீக்கப்பட்டு வருவதாக அடம்பன் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
-தொடர்ச்சியாக குறித்த பிரச்சினை தொடர்பில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு மற்றும் கிராம மக்கள் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் முறைப்பாடு செய்தும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
எனவே அடம்பன் பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புக்களை இணைத்து அடம்பன் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்களை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Reviewed by Author
on
December 01, 2018
Rating:
Reviewed by Author
on
December 01, 2018
Rating:

No comments:
Post a Comment