மலிங்கா மற்றும் யுவராஜை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுத்த அம்பானி மகனின் சாதுர்யம்!
கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் பெரிய அளவில் ஓட்டங்களை குவிக்கவில்லை. இதனால் 2019ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் யுவராஜுக்கு அடிப்படை விலையாக 1 கோடி மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை அணி யுவராஜை வாங்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அந்த அணி அவரை வாங்க ஆர்வம் காட்டவில்லை. அத்துடன் அந்த அணியிடம் குறைந்த அளவு பணமே இருந்தது.
இந்நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, தங்கள் அணியில் இருந்து சென்ற மலிங்கா மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரையும் வாங்க முடிவு செய்தார்.


இந்த வீரர்கள் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. மேலும், இவர்களுக்கு வயதாகிவிட்டதால் இவர்களை ஏலத்தில் எடுக்க போட்டி இருக்காது என்பதை ஆகாஷ் அம்பானி தெரிந்து கொண்டார்.
இதனால் குறைந்த விலையில் இவர்களை வாங்க முடிவு செய்த அவர், அடிப்படை விலையான 2 கோடிக்கு மலிங்காவை முதல் சுற்றிலேயே வாங்கினார். அதன் பின்னர், யுவராஜ் சிங்கை முதல் சுற்றில் வாங்க எந்த அணியும் போட்டி போடவில்லை.
கடைசி சுற்றிலும் அவர் பெயர் வந்தபோது, எந்த அணியும் விலை கோராத நிலையில் அவரது அடிப்படை விலையான ஒரு கோடிக்கு ஆகாஷ் அம்பானி வாங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘யுவி மற்றும் மலிங்கா இந்த ஏலத்தில் எங்களுக்கு முக்கிய வீரர்களாக இருந்தார்கள். எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.
அனுபவ வீரர்கள் இல்லை. அதை மனதில் வைத்து தான் இந்த முறை அனுபவ வீரர்களை வாங்க வேண்டும் என நினைத்தோம். கடந்த 12 முறை ஏலத்தில் மும்பை இந்தியனஸ் அணிக்கு அதிக லாபம் அளித்தது இதுதான் (அடிப்படை விலைக்கு வாங்கியது) என தெரிவித்துள்ளார்.
மலிங்கா மற்றும் யுவராஜை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுத்த அம்பானி மகனின் சாதுர்யம்!
Reviewed by Author
on
December 20, 2018
Rating:
No comments:
Post a Comment