அகதிகளை தண்டிக்க ஆயுதங்கள் வாங்குங்கள்:
Mario R. என்னும் அந்த நபர், ஆயுதங்கள் விற்பனை செய்வதற்காக இனரீதியான உணர்வுகளைத் தூண்டுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, 167 ஆயுதங்களை சட்ட விரோதமாக விற்ற குற்றத்திற்காக அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளதோடு, அவரிடமிருந்த 99,100 யூரோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
35 வயதான அந்த ஜேர்மானியர் ‘அகதிகளின் சவுக்கடி’ என்ற பெயரில் ஒரு இணையதளத்தை நடத்தி வந்துள்ளார்.
அந்த இணையதளம் மக்களை அகதிகளுக்கு எதிராக ஆயுதம் தரிக்க அழைப்பு விடுக்கிறது.
அந்த இணையதளத்தில் துப்பாக்கிகள், வில் அம்புகள் போன்ற ஆயுதங்கள் விற்கப்படுகின்றன.
அகதிகளுக்கெதிரான கதைகளையும் கொண்ட அந்த தளத்தில், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் முதலான ஜேர்மன் அரசியல்வாதிகள் மற்றும் அகதிகளின் பொம்மைகளை வைத்து, எப்படி அவற்றை தாக்கி அழிப்பது என்று மனிதர்கள் சிலர் கற்றுக் கொடுக்கும் டியூட்டோரியல் வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன.
Mario R. அந்த ஆயுதங்களை ஹங்கேரியிலிருந்து வாங்கி ஜேர்மனியில் விற்றிருக்கிறார்.
ஹங்கேரியில் அந்த ஆயுதங்கள் சட்டப்பூர்வமானவை என்றாலும் அவற்றை ஜேர்மனியில் விற்பதற்கு உரிமம் பெற வேண்டும்.
தனது குற்றங்களை Mario R. ஒப்புக் கொண்டாலும், தனக்கு ஜேர்மன் ஆயுத விதிகள் தெரியாதென்றே கூறி வருகிறார்.
அவருக்கு தண்டனை விதித்த நீதிபதி, Mario R. இன உணர்வுகளை தூண்டுவதை வெளிப்படையாக பார்க்கும்போது தவறென்றே தெரியாத வகையில் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.


அகதிகளை தண்டிக்க ஆயுதங்கள் வாங்குங்கள்:
Reviewed by Author
on
December 20, 2018
Rating:
No comments:
Post a Comment