அண்மைய செய்திகள்

recent
-

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 'கால அதிர்வுகள்' நூல் வெளியீடு -படங்கள்


சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் கால அதிர்வுகள் நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் கே.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் வீரகேசரி நாளிதழின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அத்துடன் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் நூலின் முதற் பிரதியை வவுனியா கவிதா ஸ்டோர் உரிமையாளரும் பிரபல வர்த்தகருமாகிய அ.தணிகாசலம் பெற்றுக்கொண்டதுடன் யாழ். பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கம் மதிப்பீட்டுரை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து நூலாசிரியர் பொன்னையா மாணிக்கவாசகம் ஏற்புரையாற்றினார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை தலைவர்,, செயலாளர், உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அதிபர், ஆசிரியர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


















சிரேஸ்ட ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் அவர்களின் 'கால அதிர்வுகள்' நூல் வெளியீடு -படங்கள் Reviewed by Author on December 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.