விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்க பலமான முயற்சிகள்!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைகளை நீக்கும் நோக்கில், சர்வதேச நீதிமன்றங்களில் அந்த அமைப்பினர் வழக்குகளை தாக்கல் செய்து வருவதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை, இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க உட்பட பல நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களை அடுத்து, உலகில் சுதந்திரத்திற்காக போராடும் அமைப்புகள் உட்பட அனைத்து அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்புகளாக சர்வதேச நாடுகள் அறிவித்தன. இதனடிப்படையில் சுதந்திரம் கோரி போராடி வந்த அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பும் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
செப்டம்பர் 11 தாக்குதலை தனக்குச் சாதமாக பயன்படுத்திக்கொண்ட இலங்கை அரசு, விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு சர்வதேச நாடுகளின் ராஜதந்திர ரீதியிலான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கும் முயற்சிகளில் விடுதலைப் புலிகளின் குழு ஒன்று முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின பிரதம அமைச்சரும், விடுதலைப புலிகளின் முன்னாள் சமாதான பேச்சுவார்த்தை குழுவின் பிரதிநிதியுமான வி.உருத்திரகுமாரன் தலைமையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டத்தரணியான வி.உருத்திரகுமாரன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்க பலமான முயற்சிகள்!
Reviewed by Author
on
December 31, 2018
Rating:

No comments:
Post a Comment