முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயம்! -
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் வெள்ள அனர்த்துக்குள்ளன சுதந்திரபுரம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வியஜம் ஒன்றினை மேற்டிகொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாக வியஜம் செய்துள்ளார்.
பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி உடனடியாக இம் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், இது தொடர்பாக தான் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததுடன் பாதிக்கபட்ட வீடுகள், வீதிகள் என்பனவற்றையும் பார்வையிட்டுள்ளார்.
அம் மக்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை தான் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயம்! -
Reviewed by Author
on
December 28, 2018
Rating:
Reviewed by Author
on
December 28, 2018
Rating:


No comments:
Post a Comment