அண்மைய செய்திகள்

recent
-

மிகவும் மன வேதனையில் இருக்கும் சீ.வி.விக்னேஸ்வரன்! -


இயற்கையின் சீற்றம் மீண்டும் எம் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்திருப்பது மிகவும் மன வேதனை அளிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மயில் - வாகனபுரம் இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வெள்ளநிவாரணம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கடந்த காலங்களில் போரின் நிமித்தம் மோசமாகப் பாதிக்கப்பட்டு அவற்றின் தாக்கங்களில் இருந்து விடுபடும் முன்னர் இயற்கையின் சீற்றம் மீண்டும் எம் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்திருப்பது எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
யுத்தகாலங்களில் பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்தது போல மீண்டும் பல்லாயிரக்கணக்கில் அவர்கள் இடம் பெயர நேர்ந்துள்ளது.
தமக்குக் கிடைத்த சொற்ப உதவிகள் மூலம் சிறுகச்சிறுக அவர்கள் கட்டி எழுப்பிய வாழ்வாதார செயற்பாடுகளை மழைவெள்ளம் சின்னா பின்னமாக்கியுள்ளதை அறிந்து மனவருத்தம் அடைந்தோம்.

அவர்கள் துயரங்களைத் தீர்ப்பதற்கு எம்மால் முடிந்தளவு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம்.
சென்றமுறை அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது 2015இல் எமது அமைச்சர் ஐங்கரநேசன் ஊடாகநிவாரணங்கள் வழங்கி இருந்தோம். இன்றும் வழங்குகின்றோம். தொடர்ச்சியாக நாங்கள் அவர்களுடன் இருப்போம்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேலும் உலர் உணவுகளை வழங்க உத்தேசித்துள்ளோம். தற்காலிகமானஅவர்களின் இன்றைய நிலையைக் கடந்து செல்லவே எமது நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால் நிவாரணங்களுடன் நின்றுவிடாமல் அவர்கள்தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலைவர வேண்டும். அதற்கு தன்னம்பிக்கை அவசியம்.

காலையில் கிளிநொச்சி பிரபந்தனாறு - மயில்வாகனபுரம் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் உதவிகள் வழங்கிய பின்னர் அதனைத் தொடர்ந்து மாங்குளம் மகாவித்தியாலயத்திலும் மற்றும் இரணைமடுவிற்கு அருகில் உள்ள இந்துபுரத்திலும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட எம் மக்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள். பராமரிக்கப்பட வேண்டியவர்கள். எமது கடமைகளை நாம் எமது கட்சி ரீதியாகச் சுறுசுறுப்புடன் செய்வோம்.


கட்டுப்பாட்டுடன் செய்வோம். மனிதநேயத்துடன் செய்வோம். கொடைகள் யாவும் தேவையுடையமக்களுக்கு முழுமையாகச் சென்றடையநாங்கள் எம்மால் ஆனமட்டில் முயல்வோம். விரைவில் கட்சிரீதியாக உத்தியோகபூர்வமாக மக்கள் யாவரையும் சந்திப்பேன் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் மன வேதனையில் இருக்கும் சீ.வி.விக்னேஸ்வரன்! - Reviewed by Author on December 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.