தேவையற்ற தொலைபேசி அழைப்புகளால் பாதிக்கப்படும் உலக நாடுகளின் பட்டியல்:
பிரபல தகவல் பரிமாற்ற செயலியான ட்ரூகாலர் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கின்படி தேவையில்லாத தொலைபேசி அழைப்புகள் வரும் நாடுகளில் பிரேசில் முதலிடம் பிடித்துள்ளது.
அந்நாட்டில் தனிநபர் ஒருவருக்கு மாதத்துக்கு 37 தேவையற்ற அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தனிநபருக்கு 22 தேவையற்ற அழைப்புகள் வருகின்றன.
பெரும்பாலான அழைப்புகள் ஒன்லைன் விற்பனை சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து திரும்ப், திரும்ப வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு அடுத்த இடங்களில் சிலி, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இந்தப் பட்டியலில் மொத்தம் 20 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
உலகளவில் அதிகளவு ஸ்பேம் அழைப்புகளால் பாதிக்கப்படும் நாடுகள்
- பிரேசில்
- இந்தியா
- சிலி
- தென் ஆப்பிரிக்கா
- மெக்சிகோ
- பெரு
- கோஸ்டா ரிகா
- அமெரிக்கா
- கிரீஸ்
- ஸ்பெயின்
தேவையற்ற தொலைபேசி அழைப்புகளால் பாதிக்கப்படும் உலக நாடுகளின் பட்டியல்:
Reviewed by Author
on
December 20, 2018
Rating:

No comments:
Post a Comment