நடிகர் ரஜினி..இன்று கட்சியின் கொடி, பெயர் அறிவிப்பு?
சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தான் பேட்ட, இப்படத்தில் ரஜினி, பாபிசிம்ஹா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்திற்கு ஆடியோ ரிலீஸ் இன்று மாலை சென்னை சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினி தனது கட்சி பெயரை அறிவித்து, கொடியை அறிமுகப்படுத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது தன்னுடைய பிறந்த நாள் அன்று கட்சியின் பெயரை அறிவிப்பதற்கு ரஜினி முடிவு செய்திருந்தார்.
ஆனால் அதிலிருந்து தற்போது பின் வாங்கி முடிவை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை திருவான்மியூர் அடுத்த பாம்பன் சுவாமியின் ஆசிரமத்தைச் சேர்ந்த நாராயண ஐயங்கார் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களுடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்..
அப்போது, 9-ஆம் திகதி நல்ல நாள். அன்றைய தினம் கட்சி பெயரை அறிவித்தால் நன்றாக இருக்கும். அடுத்த நாள் 10-ஆம் தேதியில் இருந்து 17-ஆம் திகதி வரை உங்கள் ராசிக்கும், நட்சத்திரத்துக்கும் அவ்வளவாக நன்றாக இல்லை.
நீங்கள் விரும்பியப்படியே நியூமராலஜி பார்த்துவிட்டோம். ஆகையால் 9-ஆம் தேதி அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
மேலும் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது, கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் நம்ம நல்ல நேரம், பேட்ட ஆடியோ ரிலீஸ் பிரம்மாண்டமாக நடக்கிறது, இதிலேயே கட்சிப் பெயரை அறிவித்துவிடலாம் என்று ரஜினியின் முக்கிய ஆலோசகர்களும், குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினி..இன்று கட்சியின் கொடி, பெயர் அறிவிப்பு?
Reviewed by Author
on
December 09, 2018
Rating:
Reviewed by Author
on
December 09, 2018
Rating:


No comments:
Post a Comment