மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்--படங்கள்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இன்று திங்கட்கிழமை17-12-2018 காலை சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பம் ஆகியுள்ளது
மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமையில் இருந்து நேற்றைய தினம் வரை இடம் பெறவில்லை சென்ற புதன்கிழமை (12) 116 ஆவது நாளாக இடம் பெற்ற அகழ்வு பணி மற்றும் அளவிடும் பணிகளுக்கு பின்னர் அகழ்வு பணி இடம் பெறவில்லை
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றமையினால் இடம் பெறாதிருந்த அகழ்வு பணியனது இன்று 117 வது வேலை நாளக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
குறித்த புதை குழியில் இருந்து இது வரை 21 சிறுவர்களின் எச்சங்கல் உட்பட மொத்தம்
276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் முழுவதையும் அப்புறப்படுத்தும் பணிகள் அதிகளவில் இடம் பெற்று வருகின்றது
அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் 'காபன்' பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் அளவில் காபன் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடை பெறுகின்றமை குறிப்பிடதக்கது.
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்--படங்கள்
Reviewed by Author
on
December 17, 2018
Rating:

No comments:
Post a Comment