சுனாமி நினைவு நாளையோட்டி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-TNV-படங்கள்
சுனாமி பேரலை ஏற்பட்டு 14 ஆம் ஆண்டு நினைவு கூறும் வகையில் 26 -12-2018 மன்னார் அடம்பன் பகுதியில் வறுமையால் பாதிக்கப்பட்ட தாய் தந்தையிழந்த 20 மாணவ மாணவிகளுக்கு
தமிழமுது நண்பர் வட்டத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மனின் நிதியுதவியில் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
சுனாமி பேரலையின் காரணமாக இலங்கை முழுவதும் பலர் பாதிக்கப்பட்டனர் பலர் காணாமல் ஆகினர் பலர் இறந்து போனார்கள் இந்த துயர சம்பவம் இடம் பெற்று 14 வருட பூர்தியை முன்னிட்டு
யுத்ததால் அதிகமாக பாதிக்கப்பட்ட கிராமமான அடம்பன் பகுதியில் தேவை அதிகம் உள்ள மாணவ மாணவிகளை தெரிவு செய்து 2019 ஆண்டுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர சபை உறுப்பினர் திரு ரெட்ண சிங்கம் குமரேஸ் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின்
தேசிய பிரதிநிதி ஜோசப் நயன் மற்றும் தமிழமுது
நண்பர் வட்ட அமைப்பின் அங்கத்தினர்கள் இயக்குநர் திரு.கஜேந்திரன் ஆலோசகர் திருமதி.ரொபினா இவர்களுடன் பெற்றோர்கள் மாணவ மானவிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டு உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Reviewed by Author
on
December 27, 2018
Rating:
Reviewed by Author
on
December 27, 2018
Rating:

No comments:
Post a Comment