அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள் புனரமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல்! -


முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்துவைப்பது தொடர்பில் இன்று மாவட்டச்செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் வசிக்கும் பொதுமக்களை மீள்குடியேற்றுவது தொடர்பிலும், கிணறுகள் சுத்தப்படுத்தல், வீதிகளை புனரமைத்தல் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்திகொடுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர் தனபாலசுந்தரம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் லிங்கேஸ்வரகுமார் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மாவட்டத்தின் அனைத்து திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள் புனரமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல்! - Reviewed by Author on December 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.