10 மணி நேர வேலை... சித்திரவதை: சுவிஸ் வர்த்தகர்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறார்கள் -
Burkina Faso நாட்டில் பருத்து விவசாயம் அதிக வருவாயை ஈட்டிவரும் நிலையில் அங்குள்ள வயல்களில் சுமார் 250,000 குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இவர்கள் 5 வயது முதல் 17 வயதானவர்கள் எனவும், இவர்களே பருத்தி வயலில் மொத்த பணியும் மேற்கொள்வார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாள் ஒன்றுக்கு சுமார் 10 மணி நேரம் வேலை செய்யும் இவர்களுக்கு கூலியாக ஒரு டொலர் மட்டுமே தரப்படுகிறது.
மட்டுமின்றி பருத்திக் காட்டில் பாம்புகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் பல குழந்தைகள் பாம்பு கடிக்கு அடிக்கடி இரையாக நேரிடும் எனவும்,
இவர்கள் எவருமே பாடசாலை செல்வதில்லை எனவும், அப்படி செல்பவர்களும் சோர்வால் எதுவும் கற்றுக்கொள்வதில்லை எனவும் தெரியவந்துள்ளது.
Burkina Faso நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் இந்த கடுமையான நிலைக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள இரு வணிக நிறுவனமே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இதில் ஒரு நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 43 பில்லியன் டொலர் அளவுக்கு வர்த்தகம் மேற்கொள்கிறது.
தற்போது Burkina Faso நாட்டில் பருத்தி வயல்களில் பரிதவிக்கும் சிறார்கல் தொடர்பில் Solidar Suisse என்ற பெயரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அம்பலப்படுத்தியுள்ளனர்.
மேலும் Burkina Faso-வில் சிறார் தொழிலாளர்கள் முறையை தடை செய்திருந்தும் வர்த்தக நிறுவனங்கள் சட்ட விரோதமாக இப்போதும் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
10 மணி நேர வேலை... சித்திரவதை: சுவிஸ் வர்த்தகர்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறார்கள் -
Reviewed by Author
on
January 28, 2019
Rating:

No comments:
Post a Comment