7வது முறையாக கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜோக்கோவிச்! ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தல் -
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்தது. இதில் உலகின் தலைசிறந்த வீரர்களான ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் மற்றும் செர்பியாவின் ஜோகோவிச் இருவரும் மோதினர்.
இந்தப் போட்டி இவர்கள் இருவரும் நேரடியாக மோதும் 53வது போட்டியாகும்.தொடக்கத்தில் இருந்தே இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
இருவருமே விட்டுக்கொடுக்காமல் ஆடியதால், இந்த ஆட்டம் 2 மணிநேரங்கள் நீடித்தது. இறுதியில் நடாலை 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார். ஜோகோவிச்சுக்கு இது டென்னிஸ் வாழ்வில் பெற்ற 15வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

மேலும், ஆடவர் பிரிவில் 7வது முறையாக அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்பு ரோஜர் பெடரர், ராய் எமர்ஸன் ஆகியோர் 6 முறை மட்டுமே இந்த பட்டத்தை வென்றுள்ள நிலையில், ஜோகோவிச் ஏழாவது முறையாக கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன் 2008, 2011, 2012, 2013, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஜோகோவிச் சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தார். அத்துடன் கடந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் யு.எஸ். ஓபன் பட்டங்களை வென்ற ஜோகோவிச்சுக்கு இது ஹாட்ரிக் வெற்றி ஆகும்.
அவுஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் அதிகநேரம் நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி இதுவாகும். உலக தரவரிசையில் ஜோகோவிச் முதலாம் இடத்திலும், ரஃபேல் நடால் 2வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7வது முறையாக கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜோக்கோவிச்! ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தல் -
Reviewed by Author
on
January 28, 2019
Rating:
No comments:
Post a Comment