மன்னார் இலுப்பக்கடவை சிப்பியாறு பகுதியில் 38kg கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது
இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தேத்தாவாடிசிப்பியாறு பகுதியில் 38 கிலோ 210 கிராம் கேரள கஞ்சாப்பொதியுடன் மன்னார் பேசாலையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரை நேற்று புதன் கிழமை02-01-2018 இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொதி செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலே குறித்த கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுதோடு,குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கஞ்சா போதைப்பொருள் 38 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று புதன்கிழமை இரவு குறித்த பகுதிக்குச் சென்று குறித்த போதைப்பொருட்களை மீட்டுள்ளதோடு,குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாப்பொதிகள் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் இலுப்பக்கடவை சிப்பியாறு பகுதியில் 38kg கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது
Reviewed by Author
on
January 03, 2019
Rating:

No comments:
Post a Comment