மன்னார்-மடு தமிழ் மக்களின் வீடுகளுக்குச் சென்று பலவந்தமாக பணம் வசூலித்த அனுராதபுர சிங்கள இளைஞர்கள் நால்வரை மடக்கி பிடித்த மக்கள் (படம்)
மன்னார் தமிழ் மக்களின் வீடுகளிற்கு சென்று பணம் வசூலித்த அனுராதபுர சிங்கள இளைஞர்கள் நால்வரை மடுவில் உள்ள மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று 07-1-2019 திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,
மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக கூறி, சில தமிழ் மக்களை மிரட்டியும் நிதி வசூலித்துள்ளார்.
தாங்கள் அனுராதபுரம் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட சிங்கள இளைஞர்கள் நால்வரை சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற அப்பகுதி கிராம அலுவலர் நடந்த சம்பவத்தை கேட்டறிந்ததுடன், மடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸார் அவர்களை காப்பாற்றும் விதமாக செயற்பட்டதுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்-மடு தமிழ் மக்களின் வீடுகளுக்குச் சென்று பலவந்தமாக பணம் வசூலித்த அனுராதபுர சிங்கள இளைஞர்கள் நால்வரை மடக்கி பிடித்த மக்கள் (படம்)
 Reviewed by Author
        on 
        
January 08, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
January 08, 2019
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
January 08, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
January 08, 2019
 
        Rating: 



 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment