மன்னார் பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சென்ற சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட ஊசி-சம்பவத்தை மறைக்க நிர்வாகம் கடும் முயற்சி-(படம்)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சம்மந்தபட்ட அதிகாரியகள் முன் வருவார்களா என மன்னார் மாவட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களும், எதிர்ப்புக்களும் வெளி வந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளச் சென்ற சிறுவன் ஒருவனுக்கு ஊசி மாற்றி ஏற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
-எனினும் குறித்த சம்பவத்தை மூடி மறைக்க மன்னார் மாவட்ட பொது வைததியசாலை நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கச் செனற் சிறுவனுக்கு ஊசி ஏற்றபட்டது.
இதன் போது குறித்த சிறுவனின் தந்தையால் ஏன் எனது மகனுக்கு ஊசி ஏற்றினீர்கள் என கேட்ட போது அங்கு கடமையில் இருந்தவர்காளால் அது தவறுதலாக ஏற்றபட்டுள்ளது.
மன்னித்துக் கொள்ளுங்கள் என கூறினர்.
இந்த நிலையில ஊசி ஏற்றப்பட்ட குறித்த சிறுவன் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வேறு ஒரு நபருக்கு போட இருந்த ஊசியை தவறுதலாக இச் சிறுவனுக்கு ஏற்றப்படுள்ளதாக வைத்தியர்களால் கூறப்பட்டதாகவும் அச் சிறுவனின் தந்தை தெரிவித்தார்.
தொடர்ந்தும் இப்படிப்பட்ட செயல்களை பலர் சுட்டி காட்டிய போதும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலை நிவாகம் கவனத்தில் எடுக்கவில்லை என மன்னார் மாவட்ட மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்ற போதும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குற்பட் வைத்தியசாலைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மன்னாரில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு தீர்வை பெற்றுக் கொள்ள முற்பட்ட போதும், அன்றைய கால கட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றியவர் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர்களுடன் தர்க்கத்தில் ஈடபட்டுள்ளார்.
-தொடர்ந்தும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும்,மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்களின் அசமந்த போக்கினால் தொடர்ந்தும் பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்று வரகின்றது.
எனவே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உடன் கூடி வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சென்ற சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட ஊசி-சம்பவத்தை மறைக்க நிர்வாகம் கடும் முயற்சி-(படம்)
Reviewed by Author
on
January 09, 2019
Rating:

No comments:
Post a Comment