மன்-பெரியமடு மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற தேசிய போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு-(படம்)
தேசிய ரீதியில் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு போதை பொருள் தடுப்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பங்கு தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவூட்டும் வகையில் மன்னார் பெரியமடு மகாவித்தியாலயதின் அதிபர் குலதீபன் தலைமையில் விழிப்புணர்வு கருத்தமர்வு மற்றும் விசேட கலந்துரையாடல் நிகழ்வு இன்று (25) காலை 10 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
குறித்த கருத்தமர்வில் பாடசாலை ரீதியில் மாணவர்கள் எவ்வாறு போதை பொருட்கள் பாவனையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் போதைப் பொருள் பாவனை தொடர்பான குற்ற செயல் ஒன்றினால் பாதிக்கப்படும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் ன்னார் பொது அமைப்புக்களின் அதிகாரி மற்றும் ஊடகவியளாலர்களினால் கருத்துரைகள் வழங்கப்பட்டது .
அத்துடன் மாணவர்களுடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
தொடர்சியாக குறித்த போதை பொருள் ஒழிப்பு வாரத்தில் நடை முறை செயற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் பொலிஸ் உள்ளூர் அரசியல்வாதிகள் ஆகியோரை நேரடியாக அழைத்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியமை குறிப்பிடதக்கது.

குறித்த கருத்தமர்வில் பாடசாலை ரீதியில் மாணவர்கள் எவ்வாறு போதை பொருட்கள் பாவனையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் போதைப் பொருள் பாவனை தொடர்பான குற்ற செயல் ஒன்றினால் பாதிக்கப்படும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் ன்னார் பொது அமைப்புக்களின் அதிகாரி மற்றும் ஊடகவியளாலர்களினால் கருத்துரைகள் வழங்கப்பட்டது .
அத்துடன் மாணவர்களுடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
தொடர்சியாக குறித்த போதை பொருள் ஒழிப்பு வாரத்தில் நடை முறை செயற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் பொலிஸ் உள்ளூர் அரசியல்வாதிகள் ஆகியோரை நேரடியாக அழைத்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியமை குறிப்பிடதக்கது.

மன்-பெரியமடு மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற தேசிய போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு-(படம்)
Reviewed by Author
on
January 26, 2019
Rating:
Reviewed by Author
on
January 26, 2019
Rating:

No comments:
Post a Comment