நிலவின் குளிர்காலம்- அளவிடும் சீனா -
நிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை பல்வேறு ஆராய்ச்சிகள் உலக நாடுகள் செய்து வந்தாலும் நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்வது குறித்து முதலலில் துவங்கியது சீனாதான்.
இதற்காக கடந்த மாதம் 8ஆம் திகதி சாங் இ-4 என்ற விண்கலத்தை நிலுவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3ஆம் திகதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.
நிலவில் பூமியை போல் இல்லாமல் சற்று மாறுபட்டே கால சூழல் அமைகிறது. அதாவது பூமியின் கணக்குபடி 14 நாட்கள் இரவாகவும், 14நாட்கள் பகலாகவும் நிலவில் இருக்கும்.
பகலில் அதிக வெப்பமாகவும் இரவில் கடும் குளிராகவும் இருக்கும். அதாவது விஞ்ஞானிகளின் கணக்குபடி பகலில் 127டிகிரி செல்சியஸ் வெப்பமாகவும், இரவில் -183 டிகிரி செல்சியஸ் உறை பனியாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
மேலும் விண்கலம் பழுதடையாமல் இருக்க அதில் உள்ள வெப்ப மூட்டிகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், அந்த கருவிகள் உருவாக்கும் மின்சக்திகள் பெற்று நிலவின் குளிர் நிலையை துல்லியமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் விண்வெளி ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நிலவின் குளிர்காலம்- அளவிடும் சீனா -
Reviewed by Author
on
January 15, 2019
Rating:
No comments:
Post a Comment