அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் போராளிகளால் மாவீரர் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள்......படங்கள்

இந்த வாழ்வாதார உதவிகளானது நீலன் அறக்கட்டளை சர்பில் புலம்பெயர் உறவுகளால் அனுப்பி வைக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்டடுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களில்  இருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாவீரர் குடும்பங்கள் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் குடும்பங்கள் சுமார் எழுபது பேருக்கு இந்த வாழ்வாதார உதவி  முருங்கன் டொன்பொஸ்கோ அரங்கில் 05-01-2019 காலை 11 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது

இந்த வழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில் பொதிகளை வழங்கி வைத்த பின் உரையாற்றிய  ப.டெனிஸ்வரன் அவர்கள் மண்மீட்பிற்காகவும் மக்கள் விடுதலைக்காகவும் எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் போராடிய  முன்னாள் போராளிகளை கோவில்களிலும் தெருக்களிலும் யாசகம் எடுக்க வைத்தவர்கள் தமிழ தமிழர்கள் என்று சொல்ல தகுதியற்றவர்கள்
ஆண்பெண் போராளிகளாக இருந்தவர்களுக்கு வேலை தொழில் வாய்ப்பு இல்லை யுத்தத்தில் அவயங்களை இழந்த போராளிகளுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களும் இல்லை அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றார்கள் அவர்களும் தங்களின் சிறுவயதில் சுயநலமாக சிந்தித்திருந்தால் நன்றாக படித்து  அரச வேலைகளை பெற்றிருப்பார்கள் வெளிநாடுகளுக்கு சென்று சுகபோகமாக வாழ்ந்திருப்பார்கள்.

நமக்காக தூய இதயத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் தெருக்களில் திரிவதை  நாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருப்போமானால் அதைவிட வெக்கித் தலைகுனிய வேண்டிய செயல்
ஒன்றும் இல்லை
முன்னால் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை பார்க்க வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உன்டு
போராளிகள் மாவீரர்களின் தியாகங்கள் உண்மையானது தமிழர்கள் சுய கௌரவம் படைத் தனித்தேசிய இனம் என்பதை வலியுறுத்த தமிழர்களாகிய நாம் ஒன்றுபட வேண்டும் அவ்வாறு ஒற்றுமைப்படாமல் சின்னாபின்னமாக பல கட்சிகளாக பல அமைப்புகளாக போவோம் என்று சொன்னால் ஏன் எதற்காக இத்தனை உயிர்கள் விதைக்கப்பட்டது என்ற கேள்வி எழும்
அதை தவிர்த்துக் கொள்வதற்காக நாம் அனைவரும் ஒன்று பட வேண்டிய கட்டாய தேவை நமக்கு உள்ளது.

அத்துடன் சிறார்களின் கல்வி விடயத்தில் நாம் அதிக அக்கறையும் கரிசனையும் கொண்டு எதிர்காலத்தில் செயற்பட நினைத்துள்ளோம் புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து வலுவான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி வடக்கு கிழக்கு தமிழ்பேசும் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் நடைமுறைக்கு சாத்தியமான செயற்பாடுகளை செய்யவுள்ளதாகவும் சட்டத்தரனியும் முன்னாள் வடமாகான மீன்பிடி அமைச்சருமாகிய ப.டெனிஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ப.டெனிஸ்வரன் மன்னார் நகர சபை உபதவிசாளர் திருவாளர் சர்மா நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி உறுப்பினர் றொஜன் மன்னார் சட்டத்திரனி செல்வராஜா டினேசன் டொன் பொஸ்கோ பங்கு தந்தை போன்றோருடன் நீலன் அறக்கட்டளை தலைவி திருமதி ஆஷா முன்னாள் போராளிகளும் மாவீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.









முன்னாள் போராளிகளால் மாவீரர் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள்......படங்கள் Reviewed by Author on January 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.