அண்மைய செய்திகள்

recent
-

நடிகர் சத்யராஜ் வெளியிட்ட உருக்கமான -துணை நில்லுங்கள்!


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்கள் விவகாரத்தில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாளுக்கு நாம் துணையாக இருக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 28 வருடங்களாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து 7 பேர் விடுதலை தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் ஒப்புதலுக்காக அரசு அனுப்பிய நிலையில், ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதையடுத்து தன் மகன் விடுதலைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, தன் மகன் உள்பட ஏழு பேரின் விடுதலைக்காக மக்களிடம் நீதி கேட்க உள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் சத்யராஜ், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரும், 28 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணிக்க உள்ளார் அற்புதம்மாள்.
இதில், அவருக்கு நாம் துணை நின்று எழுவர் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடிகர் சத்யராஜ் வெளியிட்ட உருக்கமான -துணை நில்லுங்கள்! Reviewed by Author on January 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.