உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இருக்கும் சீமான்! -
விஜய் குறித்து பேசும்போது “என் தம்பி விஜய் இருக்கான்; சர்க்கார் படத்துல பேசுனா ஆமா பேசுனேன்னு சொல்லவேண்டியது தானே. அம்மா ஜெயலலிதா அவர்களின் மீது நான் ரொம்ப பற்று கொண்டவன்; முதல்வர் அவர்களை சந்தித்து..” என்று கையை கட்டியபடி நடித்து காட்டிய சீமான்.
“உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிச்சமிக்கெல்லாமாடா பயப்படுறது; உன்மேல பெரிய மரியாதை வச்சிருந்தேன்டா.
ஒரு விரல் புரட்சியாம். ஒரு விரல் புரட்சி.. என்னத்த புரட்சி.. புரட்சி கரச்சினுகிட்டு.. என் படத்துலலாம் நடிக்க மாட்டாரு. ஆனால் , நான் பேசுறதலாம் பேசி நடிப்பாரு என்று விமர்சித்துள்ளார்.
சீமான் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் படம் உருவாகிறது என்றும், அந்த படத்திற்கு பகலவன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது என்றும் பல ஆண்டுகளாக பேசப்பட்டுவந்தது.
ஆனால், என்ன காரணத்தாலோ அந்த படம் உருவாகாத நிலையில், சீமான் படத்தில் விஜய் நடிக்கவில்லை அதன் காரணமாக தான் சீமான் விஜயை விமர்சிக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், #திருட்டுபயசீமான் என்ற ஹேஷ்டேகில் இன்று காலை முதல் தொடர்ந்து பதிவுகளை இட்டு வருகின்றனர்.
காலையில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த அந்த ஹேஷ் டேக், பின்னர் உலகளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்ததோடு, தற்போது வரை இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இரண்டாமிடத்தில் உள்ளது.

உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இருக்கும் சீமான்! -
Reviewed by Author
on
January 07, 2019
Rating:
No comments:
Post a Comment