மனிதன் செவ்வாயில் காலடி வைக்க நினைப்பது பெரும் ஆபத்தானது: எச்சரிக்கும் மகாராணியின் வானியல் நிபுணர்
பல மில்லியன்கள் செலவளித்து நாஸா செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
2030களிலாவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பிவிட வேண்டும் என அது முயற்சித்து வரும் வேளையில், பிரித்தானிய மகாராணியாரின் தனிப்பட்ட வானியல் நிபுணரான Professor Lord Martin Rees, மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப எண்ணுவது ஒரு ஆபத்தான மாயை என்று கூறியுள்ளது உலகெங்கும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியமர்த்துவது நல்ல திட்டம் இல்லை என்று கூறும் அவர் பூமியைப் போல் எந்த கிரகத்தையும் வாழத் தகுந்ததாக ஆக்க முடியாது என்கிறார்.
பூமியைத்தான் வாழத்தகுந்ததாக ஆக்க வேண்டும், நமக்காக மட்டுமல்ல, வரும் நூற்றாண்டுகளுக்காகவும் என்கிறார் அவர்.
2017ஆம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் சீதோஷ்ண மாற்றங்கள் உட்பட்ட தடைகளை மீறி நாம் வாழ வேண்டுமானால், இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் மனித இனம் மற்ற கிரகங்களை ஆக்கிரமித்தாக வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் சீதோஷ்ண மாற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு விண்வெளியை ஆக்கிரமிப்பது தீர்வாகாது என்கிறார் Martin Rees.
அதற்கு மாறாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூமியை வாழத் தகுந்ததாக ஆக்க வேண்டும் என்கிறார் அவர்.

மனிதன் செவ்வாயில் காலடி வைக்க நினைப்பது பெரும் ஆபத்தானது: எச்சரிக்கும் மகாராணியின் வானியல் நிபுணர்
Reviewed by Author
on
January 10, 2019
Rating:
No comments:
Post a Comment