வவுனியாவில் மார்கழி இசை விழா நிகழ்வு
வவுனியாவில் கலாபூசணம் தேவிமனோகரி நாகேஸ்வரனின் நினைவாக மார்கழி இசை விழா நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பிரதேசசெயலக கலாச்சார மண்டபத்தில் இன்று காலை உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜீவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
பிரதேச கலாச்சார பேரவையும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்வில் கலைஞர்களினால் கர்நாடக சங்கீத இசை நிகழ்வுகளும், நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், நகரசபை உறுப்பினர் சேனாதிராசா, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணி அகளங்கன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் மார்கழி இசை விழா நிகழ்வு
Reviewed by Author
on
January 12, 2019
Rating:

No comments:
Post a Comment